இரவு முழுக்க தூக்கம் வரலையா?? அப்போ இந்த மாறி செய்யுங்க!!

0
sleeping
sleeping

ஒருவருக்கு தூக்கம் என்பது மிக முக்கியமான ஒன்று ஆகும். ஏனெனில் அப்பொழுது தான் உடல் உறுப்புக்கள் அனைத்தும் ஒய்வு எடுக்கும். அப்பொழுது தான் அடுத்த நாள் சுறுசுறுப்பாக இயங்க முடியும்.  ஆனால் பெரும்பாலானவர்களுக்கு உள்ள பிரச்சனை தூக்கமின்மை தான். இப்பொழுது தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட என்னென்ன செய்வது என பார்க்கலாம்.

தூக்கமின்மை:

தூக்கமின்மை பிரச்சனை சரிவர சாப்பிடாததால் அல்லது அதிகப்படியான மன உளைச்சலால் ஏற்படும். இரவு முழுவதும் தூங்காமல் காலை வேளையில் தூங்குவது மிக ஆபத்தானது. பகல் பொழுதில் ஒருவர் அதிகமாக தூங்கினால் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று அர்த்தம். இரவில் 10 மணிக்குள் உறங்குவதே உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இரவில் தூங்க செல்லும் முன் வெதுவெதுப்பான பாலை குடித்தால் நல்ல தூக்கம் வரும். மேலும் வெதுவெதுப்பான நீரால் கால்களை கழுவினால் கூட இரவில் அயர்ந்த தூக்கம் வரும். மேலும் படுக்கைக்கு செல்லும் 2 மணி நேரத்திற்கு முன்னரே சாப்பிட்டால் செரிமானம் அடைந்து நல்ல தூக்கம் வரும். சிலர் இதற்கு தூக்க மாத்திரைகள் எடுத்துக் கொள்கின்றனர். இது முற்றிலும் தவறு. ஏனெனில் அதுவே பழக்கம் ஆனால் உடலுக்கு பெரிய அளவில் தீங்கை விளைவிக்கும்.

sleepless night
sleepless night

நீங்கள் தூங்கும் போது கைகால்களை நீட்டி ரிலாக்ஸ் ஆக படுத்து நெற்றியில் கட்டை விரலை வைத்து வலது இடமாக சுழற்றவும். இதனால் ஆழ்த்த துக்கம் கிடைக்கும். முதலில் செய்யும்போது கஷ்டமாக இருந்தாலும் அடுத்து நீங்கள் செய்யும்போது உங்களை அறியாமலேயே தூங்கி விடுவீர்கள்.

yoga
yoga

அடுத்ததாக படுக்கையில் படுத்தவாறு மூச்சை 4 நொடிகளுக்கு உள்ளிழுத்து கொள்ளுங்கள். அடுத்த 7 வினாடிகளுக்கு வெளியிடாமல் நுரையீரலுக்குள் வைத்திருந்து அடுத்த 8வது நொடியில் வாய் வழியாக மெல்ல மூச்சை வெளியிட வேண்டும். படுக்கையறை சுத்தமாக இருப்பது மிக அவசியம். இவ்வாறு செய்யும்போது கண்டிப்பாக ஆழ்ந்த உறக்கம் வரும். மேலும் இரவில் தூங்க செல்லும் முன் அதிகப்படியான உணவை தவிர்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here