கேப்டன்ஷிப்பில் தோனிக்கும், கோஹ்லிக்கும் இது தான் வித்தியாசம் – சொல்கிறார் கவுதம் கம்பீர்!!

0

செப்டம்பர் 21 ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிராக ஐபிஎல் 2020 இன் முதல் போட்டியில் பெங்களூரு அணி விளையாட உள்ள நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், தற்போதைய மக்களவை எம்.பி.யும் ஆன கவுதம் கமபீர் விராட் கோஹ்லிக்கும், மகேந்திர சிங் தோனியின் கேப்டன்ஷிப்பிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கூறியுள்ளார். மேலும் பெங்களூரு அணி இதுவரை கோப்பையை வெல்லாததற்கான காரணத்தையும் அவர் தெரிவித்து உள்ளார்.

ஐபிஎல் 2020:

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2008 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை ஒருமுறை கூட விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்றதில்லை. விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் என முன்னணி பேட்ஸ்மேன்கள் இருந்தும், பவுலிங்கில் ஏற்படும் சொதப்பல் காரணமாக வெற்றிக்கனியை பறிக்க முடிவதில்லை. கடந்த இரண்டு சீசன்களில் பிளேஆஃப்களுக்கு கூட பெங்களூர் அணி தகுதி பெற முடியவில்லை.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் பெங்களூரு அணியின் கேப்டனை மாற்ற வேண்டும் என விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 3 சீசன்களில் கோஹ்லி ஆர்.சி.பியின் கேப்டனாக இருந்தார், இருப்பினும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆனாலும் பெங்களூரு அணிக்கு வேறொரு கேப்டனை நியமிக்க எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனும், இரண்டு முறை ஐ.பி.எல் கோப்பையை வென்றவருமான கவுதம் கம்பீர் பெங்களூரு அணியின் தோல்விக்கான காரணத்தை கூறியுள்ளார்.

எம்.எஸ்.தோனி மற்றும் கோஹ்லி ஆகியோரின் கேப்டன் ஷிப் ஸ்டைல்களில் உள்ள வித்தியாசத்தையும் கம்பீர் சுட்டிக்காட்டினார். பெங்களூரு அணி தொடர்ந்து 6-7 போட்டிகளுக்கு ஒரே லெவன் அணி வீரர்களுடன் களமிறங்க வேண்டும் என கம்பீர் கூறியுள்ளார். விராட் கோஹ்லி மற்றும் எம்.எஸ். தோனிக்கு இடையிலான மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், எம்.எஸ். தோனி தனது லெவன் வீரர்களுடன் 6-7 போட்டிகளில் மாற்றமின்றி விளையாடுகிறார். ஆனால் பெங்களூரு அணி அவ்வாறு நிலையாக இல்லாமல் அடிக்கடி வீரர்களை மாற்றம் செய்கின்றனர்.

ஐபிஎல் போட்டியில் அதிக சம்பளம் வாங்கும் கேப்டன்கள் – விராட் கோஹ்லி தான் டாப்!!

எனவே ஆர்.சி.பி. அணியின் ஆரம்ப போட்டிகள் நன்றாக இல்லாவிட்டாலும், அவர்கள் விளையாடும் லெவன் அணி மாற்றம் செய்யப்படாமல் தொடர்ந்து 6-7 போட்டிகளில் விளையாட வேண்டும். ஏனென்றால் வீரர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் மட்டுமே வாய்ப்புகளை வழங்கினால் அவர்களால் சரிவர விளையாட முடியாது என கம்பீர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here