ஐபிஎல் போட்டியில் அதிக சம்பளம் வாங்கும் கேப்டன்கள் – விராட் கோஹ்லி தான் டாப்!!

0

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் ஐபிஎல் சீசன் 13 போட்டிகள் தொடங்க உள்ளது. 8 அணிகள் பங்கேற்க உள்ள இத்தொடரில் கேப்டன்களின் சம்பளம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது. இதில் தோனியை விட விராட் கோஹ்லி பல கோடி ரூபாய் கூடுதலாக பெறுவது ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது.

ஐபிஎல் கேப்டன்ஸ்:

பல்வேறு தடைகளை தாண்டி கொரோனா பரவலுக்கு மத்தியில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. இம்முறை சீன நிறுவனமான விவோ ஸ்பான்சரில் இருந்து விலகியதால் உள்நாட்டு நிறுவனமான ட்ரீம் 11 அதனை கைப்பற்றி உள்ளது. இதற்கான போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டு உள்ளது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடி உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இடுப்பு மடிப்பை காட்டி குத்தாட்டம் போடும் ஷிவானி – சொக்கி நிற்கும் ரசிகர்கள்!!

இம்முறை கேப்டன் விராட் கோஹ்லி தலைமையில் பெங்களூரு அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று உள்ள கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனியின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் 8 ஐபிஎல் அணிகளில் கேப்டன்கள் பெறும் சம்பளம் குறித்த விபரங்கள் கசிந்துள்ளது. அதில் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோஹ்லி முதலிடத்தில் உள்ளார்.

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் கேப்டன் விராட் கோஹ்லி – ரூ. 17 கோடி
  • டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் – ரூ. 7 கோடி
  • சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக் – ரூ. 7.4 கோடி
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் கேப்டன் டேவிட் வார்னர் – ரூ. 12.5 கோடி
  • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் – ரூ. 12.5 கோடி
  • கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் – ரூ. 11 கோடி
  • மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா – ரூ. 15 கோடி
  • சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி – ரூ. 15 கோடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here