1 மணிநேரம், 40 வினாக்கள் – பொறியியல் ஆன்லைன் இறுதிப்பருவ தேர்வு தேதி அறிவிப்பு!!

0

தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் தேர்வில் கேட்கப்படும் 40 வினாக்களில் 30 வினாக்களுக்கு பதில் அளித்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாதிரி தேர்வு தேதியும் வெளியாகி உள்ளது.

பொறியியல் தேர்வுகள்:

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் இறுதிப்பருவ தேர்வுகளை நடத்தி முடிக்குமாறு யுஜிசி அறிவுறுத்தி உள்ளது. ஆன்லைன் அல்லது மாணவர்கள் நேரில் வந்து எழுதும் முறையில் தேர்வுகளை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் இறுதிப்பருவ தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இறுதிப்பருவத்தில் அரியர் வைத்திருந்த மாணவர்களும் இத்தேர்வை எழுத வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Anna univ
Anna university

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்வுகள் நடத்தப்படுவதால், முறைகேடுகள் நடைபெற வாய்ப்பில்லை என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இறுதிப்பருவ தேர்வுகள் நடைபெறுவதற்கு முன்பு 2 மாதிரி தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது. இதற்கான தேர்வு நாட்கள் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

1 முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் குறைக்கும் பணிகள் நிறைவு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

ஆன்லைனில் 1 மணிநேரம் நடைபெறும் தேர்வில் கேட்கப்படும் 40 வினாக்களில் மாணவர்கள் 30 வினாக்களுக்கு மட்டும் பதில் அளித்தால் போதுமானது என அண்ணா பல்கலை அறிவித்து உள்ளது. மேலும் செப் 19, 21 ஆகிய தேதிகளில் மாதிரி தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here