உடல் எடையை குறைக்கும் “குதிரைவாலி சுரைக்காய் சாதம்” ரெசிபி – வாங்க சமைக்கலாம்!!

0

உடல் எடையை குறைக்க மிகவும் சிரமப்படுகிறீர்களா?? கவலை வேண்டாம்!! சுவையாக சாப்பிட்டு கொண்டே உடல் எடையை சுலபமாக குறைக்க முடியும். பாலிஷ் செய்த அரிசி மற்றும் எண்ணெய் பொருட்களை குறைத்து கொண்டாலே எடை அதிகரிக்காது. அதற்கு பதிலாக சிறுதானிய வகைகளை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். சிறுதானிய வகைகள் அதிக சத்துக்கள் நிறைந்தவை.

தேவையான பொருட்கள்:

குதிரைவாலி அரிசி -1 கப்

பாசிப்பருப்பு – 1/4 கப்

சுரைக்காய் – 1 கப்

சின்ன வெங்காயம்

மிளகாய் – 2

தக்காளி – 2

கடுகு, சீரகம் – 1 டீ ஸ்பூன்

இஞ்சி, பூண்டு – 2 துண்டுகள்

மஞ்சள் தூள் – ஒரு டீ ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

கருவேப்பிலை, கொத்தமல்லி

செய்முறை:

குதிரைவாலி அரிசி மற்றும் பாசிப்பருப்பை ஊற வைக்க வேண்டும். ஒரு குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சி.சீரகம், கடுகு சேர்த்த பின் வெங்காயம், மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கியவுடன் நறுக்கிய சுரைக்காய், தக்காளி, இஞ்சி மற்றும் பூண்டை தோல் உரித்து தட்டி போட வேண்டும். கொஞ்சம் வதங்கியவுடன் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போனவுடன் ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பை சேர்த்து அப்படியே சிறிது நேரம் மிதமான சூட்டில் கிளற வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்பொழுதுதான் அரிசி குழையாமல் இருக்கும். ஒரு கப் அரிசிக்கு, இரண்டு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி குக்கரை மூட வேண்டும். உங்கள் குக்கர்களுக்கேற்ப தேவையான விசில் விடவும். விசில் போனவுடன் சுவைக்கேற்ப நெய் அல்லது எலுமிச்சை பழச்சாறு சேர்த்தால் சுவையான ‘குதிரைவாலி சுரைக்காய் சாதம்’ தயார். நீண்ட நேரம் பசிக்காமல் இருக்கும், தொப்பை குறையும். செரிமானம் சீராக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here