10 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி- 49 ராக்கெட் இன்று விண்ணில் பாயும் – இஸ்ரோ அறிவிப்பு!!

0
rocket launch
rocket launch

இந்திய ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 10 செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி -49 என்ற ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று தெரிவித்துள்ளது. இவை 26 மணிநேர கவுண்ட்டனை முடித்து பாயும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிஎஸ்எல்வி சி- 49

பிஎஸ்எல்வி சி -49 என்ற ராக்கெட் இன்று மாலை 3.02 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் என்ற இடத்திலிருந்து செலுத்தப்படும். புவி கண்காணிப்பு பணிக்காக உருவாக்கப்பட்டது இந்த இ.ஓ.எஸ் -01 என்ற செயற்கைக்கோள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்று இந்த இ.ஓ.எஸ் 01 என்ற செயற்கைகோள் பிஎஸ்எல்வி சி-49 என்ற ராக்கெட்டின் மூலம் விண்ணில் செலுத்துவதாக இந்திய ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ தகவல் தெரிவித்து உள்ளது.

10 செயற்கைக்கோள்

பிஎஸ்எல்வி சி -49 என்ற ராக்கெட்டுடன் 10 செயற்கைகோள்களான லிதுவேனியா நாட்டில் கண்டுபிடித்த 1 செயற்கைக்கோள், அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கைக்கோள் மற்றும் லக்சம்பர் நாட்டின் 4 கடல்சார் பயன்பாட்டு செயற்கைக்கோளும் இன்று பிஎஸ்எல்வி வி-49 உடன் விண்ணில் பாயும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

rocket launch
rocket launch

இவை 26 மணிநேர கவுண்ட்டவுனை முடித்து விட்டு விண்ணில் செல்லும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து ராக்கெட்டின் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனர். நேற்று அதற்கான எரிபொருளை நிரப்பும் பணி 4 ஆவது நிலையாக நடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here