பருப்பு, காய்கறிகள் “கலவை சாதம்” ரெசிபி – கார்த்திகை ஸ்பெஷல்!!

0

கார்த்திகை திருநாளன்று நம் வீட்டில் சாம்பார், பொரியல், ரசம், அப்பளம் என வகைவகையாக சமைப்பது வழக்கம். பெண்கள் வீட்டில் உள்ள வேலைகளையும் செய்துவிட்டு இத்தனை வகைகளை சமைப்பதற்கு கடினமாக உள்ளதா?? உங்களுக்காக ஒரே முறையில் சுவையாக சமைத்து வீட்டில் உள்ள அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்த சூப்பரான கலவை சாதம் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு – 1/4 கிலோ

துவரம்பருப்பு – 100 கிராம்

கடலை பருப்பு – 50 கிராம்

புழுங்கல் அரிசி – ஒரு கிலோ

சின்ன வெங்காயம் – 100 கிராம்

மிளகாய் – 4

காய்ந்த மிளகாய் – 2

தக்காளி – 1/4 கிலோ

கேரட், பீன்ஸ் – 100 கிராம்

உருளைக்கிழங்கு – 1

முள்ளங்கி – 1

காலிப்ளவர் – 100 கி

இஞ்சி, பூண்டு – 2

மஞ்சள் தூள் – 1 டீ ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன்

சாப்பார் பொடி – 50 கிராம்

நெய் – 50 கிராம்

எலுமிச்சை – 1

கடுகு, சீரகம், பெருங்காயம்.

உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப

கருவேப்பிலை, கொத்தமல்லி

செய்முறை:

முதலில் அரிசி மற்றும் பருப்பு வகைகளை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும். அனைத்து காய்கறிகளையும் பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, தட்டிய இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து தாளித்து பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொண்ணிறமாக வதக்க வேண்டும்.

சூப்பரான, சுவையான “முருங்கைக்காய் தேங்காய்பால் குழம்பு” ரெசிபி – வாங்க அசத்தலாம்!!

வெங்காயம் சிவப்பாக வந்தவுடன் நறுக்கிய அனைத்து காய்கறிகளையும் சேர்த்து வதக்க வேண்டும். காய்கள் லேசாக வதங்கியவுடன் தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளற வேண்டும். தக்காளி நன்றாக வதங்கி குழைந்தவுடன் சாம்பார் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போனவுடன் ஊறவைத்த அரிசியையும், பருப்பையும் சேர்த்து நெய் ஊற்றி மிதமான சூட்டில் 3 நிமிடம் கிளற வேண்டும்.அப்பொழுதுதான் குழையாமல் இருக்கும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

பிறகு ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் வீதம் தண்ணீர் சேர்த்து குக்கரை மூட வேண்டும். குழையாமல் இருக்க வேண்டும் என்றால் ஒரு விசில் வருவதற்கு முன்னரே அடுப்பை அமர்த்தவும். பரிமாறுவதற்கு முன் நெய், கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறினால் மிக மிக சுவையாக இருக்கும். இந்த கலவை சாதத்தை குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவதற்கு நன்றாக குழைய வைத்து கொடுக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here