ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டி – இந்திய அணிக்கு அபராதம்!!

0

சிட்னியில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக இந்திய அணி வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது. இரு அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி நாளை இந்திய நேரப்படி காலை 9.10 மணிக்கு தொடங்க உள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி இருந்த ரசிகர்களுக்கு ஐபிஎல் தொடர் மிகுந்த உற்சாகத்தை அளித்தது. அதில் இந்திய இளம் வீரர்கள் இம்முறை அதிரடி காட்டி அசத்தினர். ஐபிஎல் தொடரை முடித்த கையோடு இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றது. அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்த பின்னர் நேற்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியில் இஷாந்த் ஷர்மா, ரோஹித் சர்மா போன்ற அனுபவ வீரர்கள் இல்லாமல் இளம் படை களமிறங்கியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 374 ரன்கள் குவித்தது. இந்த கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு முக்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். முடிவில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஐசிசி விதிகளில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட இந்திய அணி பவுலிங்கில் அதிக நேரம் செலவிட்டதாக புகார் எழுந்தது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனால் இந்திய அணி வீரர்களின் ஊதியத்தில் 20% அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இதனால் நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here