16வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய அனிகா – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

0

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் அனிகா சுரேந்தர். நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக பலர் கேக் கட் செய்துள்ளனர். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

தமிழில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்தர். அதற்கு முன்னரே அவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். குழந்தையாகவே மக்கள் மனதில் பத்திந்த அனிகா அஜித்தின் ரீல் மகள் என்றும் அழைக்கப்படுகிறார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் நயன்தாராவை போலவே அச்சு அசலாகவும் காட்சியளிக்கிறார். இப்படி இந்த வயதிலேயே பெயரும் புகழையும் பெற்றிருக்கும் அனிகாவிற்கு பல படவாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. விஜய் சேதுபதியிடமும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். மேலும் பல படங்களில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் பல பட வாய்ப்புகளை கைவசம் வைத்துள்ளார். இவருக்கு விஜய் உடன் நடிக்க வேண்டும் என்று தான் ஆசையாம். ஒரு தடவையாவது அவருடன் நடித்து விட வேண்டும் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் சில காலமாக போட்டோஷூட் நடத்துவதில் ஆர்வம் கட்டி வந்தார். ஆரம்பத்தில் இது ரசிக்கும் விதமாக இருந்தாலும் நாளடைவில் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. இதனால் அவரை திட்டி தீர்த்தும் வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதை எதுவுமே கண்டுகொள்ளாமல் வயதுக்கு மீறிய போட்டோஷூட் எல்லாம் நடத்தி இருந்தார். இந்நிலையில் நேற்று அனிகாவின் பிறந்தநாளயொட்டி பலரும் அவருக்காக வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். மேலும் தனது பிறந்த நாள் விழாவை கொண்டாடிய புகைப்படங்கள் அனைத்தையும் தனது வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அனிகா. அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here