தென் தமிழகத்தில் மிக கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

0
rain
rain

நிவர் புயல் தாக்கத்தில் இருந்து தமிழகம் மீண்டுள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அது மேலும் வலுவடைந்து புயலாக மாற அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

வானிலை அறிக்கை:

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல், இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 2ம் தேதி தென் தமிழகத்தை நோக்கி வரக்கூடும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனால் அடுத்த 48 மணிநேரத்திற்கு தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், டிசம்பர் 1ம் தேதி தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தை தாக்க வரும் ‘புரெவி புயல்’

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் & குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

அடுத்த 48 மணிநேரத்தில் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45 முதல் 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here