Wednesday, May 15, 2024

பாரத் கேஸ் மானியம் நிறுத்தப்படுகிறதா?? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் விளக்கம்!!

Must Read

மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாரத் கேஸ் பெரும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து மானியம் வழங்கப்படும் என்ற தகவலை தெரிவித்துள்ளார். இவை வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மானியம் வழங்கல்:

இன்று பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாரத் கேஸ் நிறுவனத்திலிருந்து கேஸ் பெறும் அனைத்து வாடிக்கையாளர்க்கும் தொடர்ந்து மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே நம் நாட்டில் பல கேஸ் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் கேஸ் என்ற பல நிறுவனங்களில் இருந்து வாடிக்கையாளருக்கு மானியம் வழங்கப்பட்டு தான் வருகிறது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

subsidy
subsidy

இந்நிலையில் பாரத் கேஸ் தனியாருக்கு விற்பனை செய்யும் நிலையில் வாடிக்கையாளருக்கு தொடர்ந்து மானியம் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான தகவலையும் அறிவித்துள்ளது. மேலும் தனியாருக்கு விற்பனை செய்வதினால் எந்தவித பிரச்சனையும் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.

தர்மேந்திர பிரதான் பாரத் கேஸ் நிறுவனத்தை குறித்து பேசியபோது, நாட்டின் அனைத்து குடும்பத்திற்கும் 14.2 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறது. இவை ஆண்டுதோறும் 12 கேஸ் சிலிண்டர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மானிய விலையில் கொடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

dharmendra pirathan
dharmendra pirathan

மானியம் தொடர்ந்து வழங்குவதால் எந்தவித பிரச்சனையும் இல்லை, மானியம் அரசு தரப்பில் நேரடியாக வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -