குழந்தை போன்ற பளபளப்பான முகத்தை பெற வேண்டுமா?? இதோ நச்சுனு நாலு டிப்ஸ்!!

0
Portrait of girl with problem and clear skin

நம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், குழிகள், தேவையற்ற முடி, எண்ணெய் பசையை போக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். ஒரு சிலருக்கு, முகம் வெள்ளையாக இருக்கும். ஆனால், பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவற்றால் முகத்தின் அழகு மறைந்து விடுகிறது. இதற்கு என்ன செய்வது வாங்க பார்க்கலாம்.

பளபளப்பான முகத்தை பெற:

முகத்திற்கு அடிக்கடி சோப் பயன்படுத்தக் கூடாது. முடிந்தளவு மாவு போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். எண்ணெய் பசையுள்ள சருமம் இருப்பவர்கள் காலையிலும், இரவு தூங்க செல்வதற்கு முன்பும் முகத்தை பேஷ்வாஷ் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். வெளியே செல்லும்போது சன்லோஷன் பயன்படுத்த வேண்டும்.

வறட்சிதன்மை நீங்க:

சருமம் வறட்சியாக இருப்பவர்கள் முகத்தை நன்றாக கழுவிட்டு தக்காளியின் தோலை நீக்கிவிட்டு முகத்தில் தேய்க்க வேண்டும். அரை மணிநேரம் தக்காளியை வைத்து தேய்த்து கொண்டே மசாஜ் செய்ய வேண்டும். பிறகு பச்சை பாலை பஞ்சில் தொட்டு தேய்க்க வேண்டும். இவ்வாறு, செய்வதன் மூலம் முகத்தில் உள்ள கருமை, வறட்சி நீங்கி பார்ப்பதற்கு பளிச்சென்று இருக்கும்.

கரும்புள்ளிகள் மறைய:

முகத்தில் கரும்புள்ளிகள் இருப்பவர்கள் உருளைக்கிழங்கை தோல் நீக்கிவிட்டு சாறு எடுக்க வேண்டும். ஒரு ஸ்பூன் சாறுடன், ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மூன்றையும் நன்றாக கலந்து முகத்தில் தேக்க வேண்டும். இரவு தூங்க செல்வதற்கு முன்பும் தேய்க்கலாம். இல்லையெனில், ஒரு மணிநேரம் தேய்த்துவிட்டு முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவலாம்.

முகப்பொலிவு பெற:

முகம் ஒருசிலருக்கு கலையிழந்து காணப்படும். இவ்வாறு, இருப்பவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது ஸ்டீம்பாத் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் ஊற்றி ஒரு எலுமிச்சை பழத்தோல் உள்ளே சேர்த்து மூடி போட்டு காய வைக்க வேண்டும். பின் இந்த நீரை எடுத்து ஒரு போர்வையால் போர்த்தி கொண்டு ஆவி பிடிக்க வேண்டும். முகத்தில் வியர்வை சுரந்து தண்ணியாக கொட்டும். இப்படி செய்வதால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி முகம் புது பொலிவு பெரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here