இவரை தான் நான் கல்யாணம் செஞ்சுக்க போறேன் – முதன்முதலாக வருங்கால கணவரை பற்றி மனம் திறந்த திரிஷா!!

0

தமிழ் திரையுலகில் 90s கனவுக்கன்னியாக வலம் வந்தவர் தான் த்ரிஷா. லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகையாக இருந்தவர். இவருக்கு எப்பொழுது திருமணம் என்று பலரும் எதிர்பார்த்து கொண்டிருக்கையில் தனது வருங்கால கணவரை பற்றி கூறியுள்ளார்.

திரிஷா

மாடலிங் துறையில் கால் பதித்து மிஸ் சென்னை பட்டத்தை தட்டி சென்றவர் தான் திரிஷா. பல விளம்பர படங்களில் நடித்திருக்கும் திரிஷா ஆரம்ப காலத்தில் திரைப்படங்களில் சிறுசிறு வேடத்தில் நடித்தவர். இவர் பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்திருப்பார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதிலும் 2 காட்சிகளில் மட்டுமே இடம் பெற்றிருப்பார். அதன் பிறகு அவர் ஸ்ரீகாந்த் நடித்த மனசெல்லாம் என்ற படத்தில் நாயகியாக நடித்தார். அதன் பிறகு அவருக்கு சூர்யாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படமே ‘மௌனம் பேசியதே’. அதன் பிறகு பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.

த்ரிஷாவை இதுவரையிலும் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். மேலும் பல படங்களில் பள்ளி மாணவியாக நடித்திருப்பார். மேலும் விஜய், விக்ரம் அஜித், தனுஷ் என அவர் நடிக்காத ஆளே கிடையாது. தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் கூட இவருக்கு மவுசு அதிகம்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் சில வருடங்களுக்கு முன்பாக தொழிலதிபரை மனக்கப்போவதாக நிச்சயம் வரை சென்று அந்த திருமணம் முறிந்தது. அடுத்து தெலுங்கு நடிகரான ராணாவை காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டார். இவர்களுக்கு திருமணம் நடவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் அதுவும் பிரிவிலேயே முடிந்தது.

அடுத்து வயதாகிக்கொண்டே போகுதே எப்பொழுது திருமணம் என்று பலரும் கேட்டு வந்த நிலையில் தற்போது தன் வருங்கால கணவரை பற்றி கூறியுள்ளார். அதாவது என்னை முழுவதுமாக புரிந்துகொண்ட ஒருவரை தான் நான் திருமணம் செய்துகொள்வேன்.

மேலும் இது கண்டிப்பாக காதல் திருமணமாக தான் இருக்கும். என்னை புரிந்துக்கொண்ட ஒருவரை நேரில் சந்திக்கும் போது தான் திருமணம் செய்துக்கொள்வேன். அப்படி சந்திக்க முடியவில்லை என்றாலும் இப்படியே இருந்து விடுவேன். இதற்கு நான் கவலைப்படவும் மாட்டேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here