Saturday, May 18, 2024

டெலிவரி பாய் வேலை செய்யும் சாம்பியன் – கலங்கவைக்கும் சம்பவம்!!!

Must Read

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற வெனிசுலாவைச் சேர்ந்த வாள்சண்டை வீரர், தனது வாழ்வாதாரத்திற்காக உணவு டெலிவரி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். கடந்த வாரம் ஒலிம்பிக் சாம்பியன் ரூபென் லிமர்டோ வெளியிட்ட படம் ஒன்று, உலக விளையாட்டு ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியது

ரூபென் லிமர்டோ:

கொரோனா தொற்று பல லட்சம் உயிர்களை எடுத்தது மட்டுமின்றி, பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை சேதப்படுத்தியுள்ளது. 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர் ரூபென் லிமர்டோ. லத்தீன் அமெரிக்க பகுதியில் இருந்து வந்து வாள்சண்டையில் தங்கப்பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். கொரோனா பரவல் காரணத்தினால் லாக் டவுனில் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானார்.

உணவு டெலிவரி வேலை செய்வது குறித்து ரூபென் லிமர்டோ, பணம் சம்பாதிக்க உங்களுங்கு தெரிந்த வழியில் வேலை செய்ய வேண்டும். அது எந்த வேலையாக இருந்தாலும் சரி. எல்லாம் ஒன்று தான் என்று அவர் கூறினார். தினமும் தனது பயிற்சி நேரம் முடிந்ததும், சைக்கிள் எடுத்துக் கொண்டு டெலிவரி வேலையை செய்ய துவங்குகிறார் ரூபென் லிமர்டோ.

ரூபென் லிமர்டோ தனது அன்றாட தேவைகளுக்காக போலந்து நாட்டில் உள்ள லோட்ஸ் நகரில், உணவு டெலிவரி செய்யும் வேளையில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு சுமார் 50 கிலோமீட்டர் அலைந்து 100 யூரோக்கள் வரை சம்பாதிக்கிறார். இதை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ஒவ்வொரு முறை நான் உணவு டெலிவரி செய்யும் போது 2021 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் எனக்கு பதக்கம் கிடைக்க இந்த உழைபு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -