சுவையான முஸ்லீம் ஸ்டைல் ‘மட்டன் மசாலா’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
mutton masala
mutton masala

அசைவ பிரியர்களுக்கு மட்டன் மிகவும் விருப்பமான உணவு ஆகும். மேலும் மட்டனில் தான் அதிக சத்துக்களும் அடங்கியுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இப்பொழுது முஸ்லீம் ஸ்டைலில் சுவையான ‘மட்டன் மசாலா’ எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மட்டன் – 1/4 கி

பூண்டு – 7

இஞ்சி – சிறிது

பட்டை

கிராம்பு

சீரகம் – 1 தேக்கரண்டி

பிரியாணி இலை

சோம்பு – 1 தேக்கரண்டி

ஏலக்காய்

முந்திரி

வரமிளகாய் – 6

தக்காளி – 2

செய்முறை

முதலில் மட்டனை எடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள்தூளை சேர்த்துக் கொள்ளவும். இதனை அரைமணி நேரம் அப்படியே விட்டு விடவும். இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றாமல் அதில் முந்திரி, வரமிளகாய் மற்றும் பட்டை ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.

mutton masala
mutton masala

அதன் பின் அதனை மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். அதில் ஒரு தக்காளியையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இப்பொழுது குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து வதக்கவும். அதன் பின் மட்டனை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

mutton masala
mutton masala

இப்பொழுது மட்டனில் இருந்து தண்ணீர் வெளிவரும். இந்த வேளையில் அரைத்து வைத்த கலவையை அதில் சேர்த்து நன்கு கிளறவும். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். அதன் பின் 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்து 4 விசில் வந்ததும் இறக்கினால் சுவையான மட்டன் மசாலா தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here