ஒரே மாதத்தில் ‘முடி உதிர்வை’ முழுமையாக நிறுத்த வேண்டுமா?? இந்த இரண்டே பொருட்கள் போதும்!!

0
hair growth tips
hair growth tips

முடி உதிர்வு பிரச்சனை நம்மில் பலருக்கு அதிகம் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் மாறி வரும் பழக்கவழக்கங்கள் தான். தலைக்கு சரியாக எண்ணெய் தேய்க்காமல் இருப்பது போன்றவை முடியின் வேர் வரை பாதிப்பை ஏற்படுத்தி முடி உதிர்வை ஏற்படுத்துகிறது. இப்பொழுது அதிக செலவில்லாமல் முடி உதிர்வை தடுக்க எளிமையான முறையை இந்த பதிவில் காணலாம்.

முடி உதிர்வை தடுக்க

முடியின் வேர்களுக்கு ஊட்டம் இல்லாத போது முடி உதிர்வு கண்டிப்பாக ஏற்படும். மேலும் நமது உடலில் இரும்பு சத்துக்கள் குறைபாடு அதிகம் இருந்தாலும் தலை முடி பிரச்சனைகள் ஏற்படும். எனவே இரும்பு சத்துக்கள் அதிகம் இருக்கும் உணவு பொருட்களை நாம் எடுத்துக் கொண்டால் ம்முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

hair fall
hair fall

மேலும் கருவேப்பிலையை தினமும் பச்சையாக சாப்பிட்டு வந்தால் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். மீன் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் உணவு ஆகும். எனவே மீனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். படுக்கைக்கு செல்லும் முன் ஆலிவ் எண்ணெயை சூடுபடுத்தி அதனை தலைக்கு செய்து மசாஜ் செய்யலாம். இதனால் முடியின் வேர்களுக்கு ஊட்டமளிக்கும்.

  • இப்பொழுது கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை மூன்று விதமாக பயன்படுத்தலாம்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

  • முதலில் எண்ணெய்யாக பயன்படுத்தலாம். அதாவது நாம் அரைத்து வைத்த வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் தூளை இரண்டு தேக்கரண்டி எடுத்துக் கொள்ளவும். அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி 2 நாட்கள் வெதுவெதுப்பான இடத்தில் வைக்க வேண்டும். அதன் பிறகு அதனை முடியில் தடவி வந்தால் முடி உதிர்வை தடுக்கலாம்.
hair fall problems solution
hair fall problems solution
  • அடுத்ததாக அதனை பேக்காக பயன்படுத்தலாம். அதாவது வெந்தயத்தூளை 2 தேக்கரண்டி எடுத்து வெதுவெதுப்பான நீரில் பேஸ்ட் போல கலந்து அதனை முடியில் வேர் வரை தடவி 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளிக்கலாம்.
  • அதன் பிறகு மற்றொரு முறையாக 2 தேக்கரண்டி வெந்தயத்தூளை எடுத்து அதில் 1 கப் வெதுவெதுப்பான நீரை 3 மணி நேரம் அப்படியே விட்டு விடவும். இப்பொழுது அந்த தண்ணீரை வடிகட்டி அந்த நீரை முடியின் வேர் வரை நன்கு தடவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடிக்கு ஊட்டச்சத்துக்கள் இயற்கையாகவே கிடைத்து முடி வளர்ச்சியும் அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here