சுறுசுறுப்பில் ரெக்கை கட்டி பறக்கணுமா?? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!!

0
உடல் சுறுசுறுப்பு
உடல் சுறுசுறுப்பு

எப்பொழுதும் சுறுசுறுப்பு இல்லாம சோம்பலாவே இருக்கீங்களா?? காலையில் வேகமா எழுந்திருக்க முடியலையா??? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். சுறுசுறுப்பா இருக்க என்னென்ன செய்யலாம்னு பாப்போம் வாங்க.

உடல் சுறுசுறுப்பு

சிறிது நேரம் மட்டுமே நம்மால் சுறுசுறுப்பாக இருக்க முடியும். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு நாம் சோர்வாகிவிடுகிறோம். இதற்கு காரணம் உடலுக்கு தேவையான ஆற்றல் இல்லாதது தான். இதனால் எந்த வேலையும் செய்ய ஒரு ஆர்வம் இல்லாமல் போகிறது. ஏனெனில் நமது உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடே காரணம். இதற்கு சில வழிமுறைகள் உள்ளன.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

lazy
lazy

முதலில் காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரை பருக வேண்டும். மேலும் நம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்துக்கள் குறைபாட்டால் கூட சோம்பல் ஏற்படலாம். சாப்பிட்டவுடன் தூங்குவதை முதலில் தவிர்க்க வேண்டும். காலை, மாலை வேளையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். தினமும் தேன் மற்றும் வெற்றிலை சாப்பிடுவதால் வயிறு சுத்தமாகி மந்தத்தன்மையை குறைக்கும்.முளைகட்டிய உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளவும். இரவில் தூங்க செல்லும்முன் பால் குடித்துவிட்டு தூங்கவும்.

fruits
fruits

தினமும் ஒரு பழ வகையை எடுத்துக்கொள்ளலாம். காலையில் உணவிற்கு முன் சாதம் வடித்த தண்ணீரை உப்பு கலந்து குடித்தாலும் ஊட்டச்சத்து அதிகரிக்கும்.இது உடல் சூட்டை தடுக்கும். இதனால் சோம்பல் குறையும். தினமும் ஒரு கீரை வகைகள் மற்றும் முட்டையை உணவில் சேர்த்துக்கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here