இதுக்காக தாங்க இ-பாஸ் – தமிழக முதல்வர் விளக்கம்!!

0
eps
eps

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே இ-பாஸ் என்பது யார் யார் எங்கு செல்கின்றனர் என அறிந்து கொள்வதற்காகவே என தமிழக முதல்வர் எடப்பாடி கூறியுள்ளார்.

இ.பி.எஸ்

கடலூரில் உள்ள கொரோனா பரிசோதனை முகமை ஆய்வு செய்த இ.பி.எஸ் பேட்டியாளர்களிடம் கூறியதாவது, “தமிழகத்தில் கொரோனா தடுப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். கொரோனா பரிசோதனை அதிகரித்திருப்பதால் நோய்த்தொற்று கட்டுக்குள் உள்ளது. மேலும் கொரோனாவிற்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் நோய்த்தொற்று உள்ளவர்கள் பீதி அடைய வேண்டாம்.

e-pass
e-pass

இதற்கிடையில் மாணவர்களுக்கு அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கல்லூரிகளில் அரியர் வைத்த மாணவர்கள் அனைவருக்கும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வை கொரோனா முடிந்த நடத்த வேண்டும் என பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். இதனையடுத்து இ-பாஸ் உள்ளதால்தான் யார் யார் எங்கு செல்கின்றனர் என்ற விவரத்தை அறிந்துக்கொள்ள முடிகிறது. தொழில் துறையினர் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து தமிழக அரசின் நடவடிக்கைகளை பாராட்டி வருகின்றனர்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here