இந்த லாக்டவுன்- இல் வீட்டுல இருந்தே வேலை பாக்குறீங்களா?? அப்போ இதை படிங்க.!

0

ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்தால் தான் வேலை செய்வார்கள், வீட்டில் இருந்தால் வேலை செய்யமாட்டார்கள் என்ற எண்ணம் இந்தக்கால பெரும்பாலான மேலதிகாரிகளுக்கு இருக்கும். அதனை நேரடியாகவும் கேட்க முடியாது. எனவே, அவ்வபோது போன் பண்ணி வேலை விஷயம் பேசுவது போல் தெரிந்து கொள்வார்கள். அந்த வகையில், உங்கள் வேலையை கச்சிதமாக செய்து கொண்டிருக்கீறர்கள் என்பதை நீங்களே உங்கள் மேலதிகாரிக்கு புரிய வைக்கலாம். இதன் மூலம் நிறுவனத்தில் உங்களுக்கு நற்பெயரும் ஏற்படும், உங்கள் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும்.

குறுஞ்செய்திகள்

மேலதிகாரிடத்தில் இருந்து எந்த மெசேஜ் வந்தாலும், எந்த இமெயில் வந்தாலும் அதற்கு உடனே ரிப்ளே செய்ய வேண்டும். அதே போல், உங்கள் வேலையில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலும் முதலில் அதை மேலதிகாரியிடம் தெரிவியுங்கள். அதன்பிறகு, அந்த இடையூறை சரி செய்யுங்கள். உதாரணத்திற்கு வீட்டில் சட்டென்று மின்சார தடை ஏற்பட்டிருக்கலாம்.

இப்போ தான் புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்கீங்களா?? அப்போ இது உங்களுக்கு தான் படிங்க.!

அப்போது மின்சாரம் மீண்டும் வரும் வரையில் பொறுத்திருக்கக் கூடாது. ஒரு பத்து நிமிடங்கள் மட்டும் பொறுத்திருந்து கரண்ட் வரவில்லை என்றால், மேலதிகாரியிடம் உடனே சொல்லிவிட வேண்டும். இதன் மூலம் உங்கள் நிலைமையை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

அவ்வப்போது அப்டேட் செய்யுங்கள்

தினமும் நீங்கள் எப்போது வேலை செய்ய தொடங்குகிறீர்கள், எப்போது வேலையை முடிக்கிறீர்கள் என்பதை உங்கள் மேலதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். குறைந்தபட்சம் 2,3 நாட்களுக்கு ஒரு முறையாவது இது போன்று பின்பற்ற வேண்டும். வேலை நேரத்தில் உங்களை எப்போது தொடர்பு கொள்ள முயற்சி செய்தாலும், நீங்கள் இருக்க வேண்டும். குறிப்பாக சில நிறுவனங்களில் வீடியோ கால் செய்வார்கள். அதற்கு ஏற்றவாறு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

நமக்கு ஒதுக்கிய வேலை

மேலதிகாரியை ஈர்ப்பதற்காக ஆர்வக்கோளாறில் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்யாதீர்கள். உங்களுக்கென இருக்கும் வரைமுறைக்கு, உங்கள் எல்லைக்கு உட்பட்டு வேலை செய்தாலே போதுமானது.

21 நாள் எப்படி வீட்டுலயே இருக்குறதுனு யோசிக்கிறீங்களா.?? அப்போ இத கண்டிப்பா படிங்க.!

இன்னும் சிலர் இருப்பார்கள், நல்ல வேலை செய்கிறேன் என்பதை நிரூபிக்க அடுத்தவர்களின் வேலைகளையும் சேர்த்து செய்து காண்பிப்பார்கள். அதுவும் தவறானது. எனவே, உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை மட்டும் கச்சிதமாக செய்தாலே போதுமானது.

விழிப்புடன் இருங்கள்

வீட்டில் இருந்து வேலை பார்க்கும் போது, நமது கவனத்தை சிதறடிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும். உதாரணத்திற்கு குழந்தைகள் விளையாடுவார்கள், டிவியில் ஏதாவது பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கும். எனவே, அவை அனைத்திலும் சிறிது கவனத்துடன் இருக்க வேண்டும்.

முடிந்த வரையில் வேலை நேரத்தில் தனி அறையில் இருக்க பழகிக் கொள்ளுங்கள். குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவழிக்கக்கூடாது. சில நேரங்களில் மேலதிகாரியிடம் இருந்து போன் வரும், அதை கவனிக்க மறந்து விடுவோம். எனவே, வேலை நேரத்தில் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here