21 நாள் எப்படி வீட்டுலயே இருக்குறதுனு யோசிக்கிறீங்களா.?? அப்போ இத கண்டிப்பா படிங்க.!

0

கொரோனா வைரசால் தற்போது நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது. இதில் பலபேர் 21 நாட்கள் எப்படி வீட்டிலேயே இருப்பது என்று யோசிப்பீர்கள். இத்தனை நாட்கள் நாம் ஓய்வில்லாமல் உழைத்து கொண்டு இருந்தோம். தற்போது 21 நாட்கள் நாம் சாதகமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

21 நாட்கள்

இந்த காலத்தில் ஆண்கள் பெண்கள் என இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஏனெனில் விலைவாசி, பள்ளி கட்டணம் போன்றவற்றை சமாளிக்க இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதே சிறிது நேரம் தான். குழந்தைகளை கூட சரியாக பார்க்க முடியாத நிலை. குடும்பத்துடன் நேரம் செலவழிக்க இயலாமல் இருந்தோம். தற்போது அதற்கான நேரமாக இந்த 21 நாட்களை நாம் பயன்படுத்தி கொள்வோம்.

குடும்பத்துடன்

21 நாட்களை நாம் கணவன் மனைவி குழந்தைகளுடன் செலவழிப்போம். எந்த மனஅழுத்தமும் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம். மேலும் குடும்பத்துடன் மனம் திறந்து பேசலாம். வீட்டு வேலைகளை மனைவியுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இது ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொள்ள ஒரு வாய்ப்பு.

கொரோனாவிலிருந்து தப்பிப்பது எப்படி?? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.!

பிடித்த பாடலை கேளுங்கள். குடும்பத்துடன் அமர்ந்து டிவி பாருங்கள். சந்தோஷமான ;விஷயங்களையே கேட்க விரும்புங்கள். கெட்ட விஷயங்களை தவிருங்கள். இத்தனை நாட்கள் நீங்க உழைத்ததற்கான ஒய்வு என்று நினையுங்கள். மேலும் கண்டிப்பாக யோகா அல்லது உடற்பயிச்சி மேற்கொள்ளுங்கள். இத்தனை நாட்களும் நாம் நேரம் இல்லை என்றே சொல்லி கொண்டிருந்தோம். உடல் எடையை குறைக்க அல்லது அதிகரிக்க கண்டிப்பாக முயற்சிக்கலாம்.

மேலும் அரசின் அறிவிப்புப்படி யாரும் வெளியே வராதீர்கள். அத்தியாவசியத்திற்காக வெளியே சென்று வந்தாலும் கை கால்களை நன்கு தேய்த்து கழுவுங்கள். மேலும் நாம் கொண்டு போகும் பொருட்கள் மீதும் சனிடைசர் வைத்து துடையுங்கள். தும்மும்போதோ இருமும் போதோ கை உபயோகிக்காதீர்கள். வீட்டை சுத்தம் செய்து கொண்டே இருங்கள். குழந்தைகள் இருக்கும் வீட்டில் கூடுதல் கண்காணிப்புடன் இருங்கள்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here