ஆரோக்கியமான உடலுக்கு அருமையான டிப்ஸ் – இதோ உங்களுக்காக!!

0

நம் உடலுக்கும் சில ஒழுங்குமுறைகள் இருக்கின்றன. எந்த எந்த நேரங்களில் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு அட்டவணையே உள்ளது. ஒருநாளைக்கு மூன்று வேலை சாப்பிட வேண்டும். இரண்டு வேலை பல்துலக்க வேண்டும். 8 மணிநேரம் உறங்கம் என்று ஒவ்வொன்றிற்கும் சில வழிமுறைகள் இருக்கின்றனர். கீழே கொடுக்கப்பட்ட விதிமுறைகளை சரியாக பின்பற்றினால், நாம் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

கால அட்டவணை:

  • நல்இரவு 1 முதல் 3 மணி வரை – கல்லீரல் ரத்தத்தை சுத்தப்படுத்தும் நேரம், கட்டாயமாக தூங்க வேண்டும்.
  • விடியற்காலை 3 முதல் 5 மணி வரை – நுரையீரலுக்கான நேரம், இந்நேரத்தில் தியானம், மூச்சுப்பயிற்சி செய்வதால் ஆயுள் நீடிக்கும்.
  • காலை 5 முதல் 7 வரை – பெருங்குடல் நேரம், இந்தநேரங்களில் காலை கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலசிக்கல் பிரச்சனை ஏற்படாது.
  • காலை 7 முதல் 9 வரை – வயிற்றின் நேரம், இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.

  • காலை 9 முதல் 11 வரை – மண்ணீரல் நேரம், வயிற்றில் உள்ள உணவை செரிக்கும் நேரம். இந்த நேரத்தில் எதையும் எதையும் சாப்பிட கூடாது. தண்ணீர் கூட குடிக்ககூடாது.
  • காலை 11 முதல் 1 வரை – இதயத்தின் நேரம், இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாக பேசுதல், பயப்படுத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.
  • பிற்பகல் 1 முதல் 3 வரை – சிறுகுடல் நேரம், மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.
  • பிற்பகல் 3 முதல் 5 வரை – சிறுநீர்ப் பையின் நேரம், நீர்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

  • மாலை 5 முதல் 7 வரை – சிறுநீரகங்களின் நேரம், தியானம், இறைவழிபாடு செய்வதற்கு உகந்தது.
  • இரவு 7 முதல் 9 வரை – பெரிகார்டியத்தின் நேரம், பெரிகார்டியம் இதயத்தை சுற்றி இருக்கும் ஒரு வகை சவ்வு இது இரவு உணவுக்கேற்ற நேரம்.
  • இரவு 9 முதல் 11 வரை – உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்க வேண்டும்.
  • இரவு 11 முதல் 1 வரை – பித்தப்பை நேரம், அவசியம் உறங்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here