Tuesday, April 30, 2024

கொரோனவிற்கான தடுப்பூசி அடுத்த ஆண்டு கிடைத்து விடும் – ஆதார் பூனவல்லா உறுதி!!

Must Read

இந்தியாவில் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கிடைக்கும் என்ற செய்தியை வெளியிட்டுள்ளார்.

ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்ட் தடுப்பு மருந்து:

ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்ட் தடுப்பூசி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியை ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.இது பரிசோதனையில் வெற்றி பெற்றும், ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதல் சரியான நேரத்தில் கிடைத்தால் மட்டுமே 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் கிடைக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனெகாவின் கொரோனா தடுப்பூசி A Z D1222 சோதனை முடிவு அடுத்த மாதம் வெளியாகப்போவது இல்லை என்றும் டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரியில் இங்கிலாந்து கண்டிப்பாக தடுப்பூசியை தயாரித்து வெளியிடலாம் என்று கூறப்படுகிறது. இந்தியா மற்றும் மற்ற நாடுகளில் இந்த தடுப்பூசியை பெற உள்ளனர். இதன் விளைவுகளை அறிய 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகலாம் என்று கூறுகின்றன. ஆரம்பத்தில் இத்தடுப்பூசியை 60-70 மில்லியன் அளவு உற்பத்தி செய்வதாக தெரிவித்து உள்ளனர்.

இயக்குனர் பொல்லார்ட்:

தலைமை புலனாய்வாளர் ஆண்ட்ரு பொல்லார்ட் பிரிட்டிஷ் சட்டமியற்றுபவர்களிடம் தடுப்பூசி வேலை செய்ததா? இல்லையா?என்று இந்த ஆண்டு தெரியவரும் என்றும். அதன் பின் தரவுகளை கட்டுப்பாட்டாளர்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டும். பின்னர் யார் இதை பெறலாம் என்று அரசியல் முடிவு எடுக்கப்படும் என ராய்ட்டர்ஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

Andrew Pollard
Andrew Pollard

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி 3 ஆம் கட்ட சோதனை இந்த இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும் என்று கூறுகின்றன. சார்ஸ் மற்றும் கோவ் -2 க்கு எதிரான போராட்டத்தில் இந்த தடுப்பூசி பயனுள்ளதாக அமையும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

ஆதார் பூனவல்லா கூறியதாவது, ” இந்த தடுப்பு மருந்து வாய்ந்ததாகவும் பயன் அளிப்பதாகவும் இருந்தால் மட்டுமே அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது” இவ்வாறாக தெரிவித்துள்ளார்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, ஒரு கிலோ இவ்வளவா??

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல்களும் பாதிப்படைந்த நிலையில், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. ஆனால் இப்போது தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -