மகள் கல்யாணம் என்று கூறி ஒரு கோடி மோசடி – பாதிக்கப்பட்டவர் தீக்குளிப்பு முயற்சி!!

0

தனது மகளுக்கு திருமணம் என்று கூறி 25 க்கு மேற்பட்ட பெண்களிடம் கடன் உதவி வேண்டும் என்று வாங்கி ஒரு கோடி பணத்திற்கு மேல் வசூலித்த தம்பதியை கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தீக்குளிக்க முச்சற்சிசெய்தார்கள்.

பணம் மோசடி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடையாலுமூடு செக்கட்டிவிளையைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 56)-கிறிஸ்டினாள்(வயது 53)தம்பதி. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக ரப்பர் மரத் தோப்பு உள்ளது. இவர்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெண்கள் மற்றும் முதியோர்களிடம் பணம் மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது.

தங்கள் மகளுக்கு திருமணம் செய்வதற்கு பணம் உதவி வேண்டும் என்று சுற்றுவட்டாரத்தில் உள்ள பெண்களிடம் 20,000ரூபாய் முதல் 20,00,000 ரூபாய் வரை வட்டிக்கு கடன் தருமாறு கேட்டு 1 கோடி வரை பணம் வசூலித்துள்ளனர். இவர்கள் மீது சந்தேகம் வர கூடாது என்பதற்காக ஒரு மாதம் மட்டும் வட்டி பணம் தேதி தவறாமல் குடுத்திருக்கிறார்கள். இதைப்போன்று 25க்கு மேற்பட்ட பெண்களிடம் பணம் மோசடி செய்துள்ளார்கள்.

fire suicide

இதைக்குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தாம் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. எனவே பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் நேற்று காலை அந்த தம்பதியர் வீட்டின் வெளிய அமர்ந்து போராட்டம் நடத்த தொடங்கினர். இதை குறித்து தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்தபோது ஒரு மூதாட்டி மண்ணெண்ணைய ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரைக் காப்பாற்றி சமாதானப்படுத்தினர். போலீசார் அந்த தம்பதியை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் வரவில்லை. பாதகிக்கப்பட்டோர் குடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் இதை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here