டிசம்பர் 10 வரை பள்ளிகள் திறக்கப்படாது – மாநில அரசு அறிவிப்பு!!

0
மாநிலம் முழுவதும் மார்ச் 16 முதல் பள்ளிகள் இயங்கும் நேரம் மாற்றம் - கல்வித்துறை அதிரடி உத்தரவு!!
மாநிலம் முழுவதும் மார்ச் 16 முதல் பள்ளிகள் இயங்கும் நேரம் மாற்றம் - கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

இந்த வருடத்தில் ஆரம்பித்த கொரோனா தொற்று பல பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டு சென்றது என்றே சொல்லலாம். எந்த வருடமும் நிகழாத விதமாக பள்ளி கல்லூரிகள் அனைத்து மூடப்பட்டன. இந்நிலையில் ஹரியானா மாநில அரசு டிசம்பர் 10 வரை பள்ளிகள் யாவும் திறக்கப்படாது என்று அறிவித்துள்ளது.

பள்ளிகள் திறப்பு

சீனாவில் ஆரம்பித்த இந்த கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. மேலும் லட்சக்கணக்கான உயிரிழப்புகளையும் சந்தித்து வருகிறோம். இதற்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் பணிகளில் வல்லுநர்கள் தீவிரமாக களமிறங்கி வருகின்றனர். மேலும் சில மருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

school
school

மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது. இதனால் மக்கள் வெளியில் வர முடியாமல் தவித்தும் வந்தனர். மக்கள் ஒன்றாக கூடும் பொது இடங்களுக்கு தடை விதிக்கவும் செய்தது. திரையரங்குகள், பள்ளி மற்றும் கல்லூரி என அனைத்தும் மூடப்பட்டன. பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பல சர்ச்சைகளும் ஏற்பட்டது. ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் பலர் கோர்ட்டில் முறையிட்டும் வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்பொழுது கொரோனா தோற்று ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது என்றே சொல்லலாம். மேலும் பல தளர்வுகளை அரசு வெளியிட்டு தான் வருகிறது. ஆனால் பள்ளிகள் எப்பொழுது திறக்கும்?? என்று தான் பலரது கேள்வியாக உள்ளது. அந்த வகையில் ஹரியானாவில் பள்ளிகள் திறப்பை பற்றி மாநில அரசு அறிவித்துள்ளது. அதாவது நவம்பர் 30 வரை பள்ளிகள் யாவும் திறக்கப்படாது என மாநில அமைச்சர் அனில் விஜ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேலும் 10 நாட்களுக்கு என டிசம்பர் 10 பள்ளிகள் திறக்கப்படாது என அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here