Friday, May 3, 2024

தொடர்ச்சியாக உயர்ந்து வரும் தங்க விலை – பீதியில் மக்கள்!!

Must Read

நேற்று அதிரடியாக உயர்ந்து தங்க விலை இன்று அதிகரித்து மக்களை கவலை அடைய வைத்துள்ளது. பொது முடக்க காலத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்தது போல் உயர்ந்து விடுமோ? என்று மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கொரோனா பரவல்:

கொரோனா பரவல் அச்சம் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதன் விளைவாக இந்தியாவில் பங்குச்சந்தை மற்றும் ஜிடிபி வரலாறு காணாத அளவு குறைந்தது. இதனால் அச்சம் அடைந்த முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்தனர். காரணம், தங்கம் என்றுமே ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. தங்கத்திற்கு என்று தனி மதிப்பு உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

“மண்ணுல போடுற காசும், பொன்னுல போடுற காசும் என்னைக்கும் பாதுகாப்பானது தான்” என்று பெரியவர்கள் கூட சொல்லுவார்கள். இப்படியாக இருக்க தங்க விலை வரலாறு காணாத அளவு தடாலடியாக கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகின்றது. நேற்று காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் உயர்ந்து வந்த தங்க விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அச்சம் மற்றும் கவலை அடைந்துள்ளனர்.

இன்றைய விலை நிலவரம்:

சென்னையில் இன்று ஆபரண தங்கம் ஒரு சவரன் 8 ரூபாய் உயர்ந்து 38,328 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் 4,791 என்று விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் 66.60 என்று விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 66,600 என்று விலை நிர்ணயிப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -

More Articles Like This

- Advertisement -