பைனலுக்கு முன்னேறுமா மும்பை அணி – டில்லி அணியுடன் ‘விறுவிறு’ மோதல்!!

0

ஐ.பி.எல். தொடரின் முதல் தகுதி சுற்றில் மும்பை, டில்லி அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி நேரடியாக பைனல் செல்லலாம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

ஹர்திக் பாண்ட்யா பலம்

ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐ.பி.எல். தொடர் நடக்கிறது. லீக் சுற்று முடிவில் மும்பை, டில்லி, ஐதராபாத், பெங்களூரு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன. துபாயில் நடக்கவுள்ள முதல் தகுதி சுற்றில் மும்பை, டில்லி அணிகள் மோதுகின்றன. மும்பை அணிக்கு குயின்டன் (443 ரன் ), இஷான் (440) அபாரமாக செயல்படுகின்றனர். இவர்களுடன் கேப்டன் ரோகித், ஹர்திக் பாண்ட்யா, போலார்ட் என ஆட்டத்தின் போக்கை மாற்றும் வீரர்கள் உள்ளனர். பந்துவீச்சில் பும்ரா, பவுல்ட் ஆதிக்கம் செலுத்தினால் பைனலுக்கு முன்னேற முடியும்.

மிரட்டும் தவான்

டில்லி அணிக்கு இரண்டு சதம் அடித்த ஷிகர் தவான் (525 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (421) பேட்டிங் முதுகெலும்பாக திகழ்கின்றனர். வேகப்பந்து வீச்சை ரபாடா (25 விக்கெட்), நார்ட்ஜே (19) கவனித்து கொள்கின்றனர். இதுவரை இரு அணிகளும் 26 போட்டியில் மோதி உள்ளன. மும்பை 14, டில்லி 12ல் வென்றுள்ளது.

உத்தேச லெவன் அணி விவரம்:

மும்பை அணி: குயின்டன், ரோகித் (கேப்டன் ), சூர்யகுமார், இஷான், போலார்ட், ஹர்திக் பாண்ட்யா, குர்னால் பாண்ட்யா, ராகுல் சகார், பட்டின்சன், பும்ரா, பவுல்ட்.
டில்லி அணி: தவான், பிரிதிவ், ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன் ), ரிஷாப், ஸ்டாய்னிஸ், அக்சர், ரபாடா, நார்ட்ஜே , அஸ்வின், சாம்ஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here