Friday, May 3, 2024

‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி – முக்கிய பொறுப்பு வழங்கிய கமல்!!

Must Read

கடந்த 1995 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, நடிகர் கமல்ஹாசனின் “மக்கள் நீதி மய்யம்” கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு கட்சியில் முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

“மக்கள் நீதி மய்யம்”

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் முக்கியமான பணிகளில் இறங்கியுள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் கமல்ஹாசனும் போட்டியிடவுள்ளார். இந்த சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும்? போன்றவற்றை நேரம் வரும் போது அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெரிய தலைவர்கள் என்று சொல்லும்படி யாரும் இல்லாததால் மக்கள் புதிதாக களம் இறங்கும் போட்டியாளர்கள் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார். பலரும் கட்சிகளிலும் இணைகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

santhosh babu ias
santhosh babu ias

தற்போது ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான சந்தோஷ் பாபு “மக்கள் நீதி மய்யம்” கட்சியில் இணைந்துள்ளார். அவர் கடந்த 1995 ஆம் ஆண்டு பதவியில் இருந்தபோது பாரத் நெட்டில் ஊழல் நடப்பதற்கான வாய்ப்புகள் இருந்ததால் தான் விருப்ப ஓய்வு பெற்றதாக செய்தியாளர்களிடம் ஒரு முறை தெரிவித்துள்ளார். அவர் தற்போது கமல்ஹாசன் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு கட்சியின் சார்பில் தலைமை அலுவலக செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

திடீரென உடல் எடை கூடி குண்டான பிக் பாஸ் அபிராமி – ரசிகர்கள் ஷாக்!!

இதுகுறித்து நடிகர் கமல் பேசுகையில், “நமது கட்சியில் சந்தோஷ் பாபு போல் பலரும் இனைய வேண்டும். கட்சியில் நல்லவர்கள் இணைய வேண்டும் என்பதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் ஒரு உதாரணம். அவர் சரியான நேர்தத்தில் சரியாக முடிவெடுத்து கட்சியில் இணைந்துள்ளார். அதனால் அவருக்கு முக்கியமான பதிவு கட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளது” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக  மக்களே., நாளை  தொடங்கவிருக்கும் அக்னி நட்சத்திரம்.., வானிலை மையம் விடுத்த  எச்சரிக்கை!!

மற்ற கோடை நாட்களை விட அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் அதிகரிக்கும் என்பது சாஸ்திரத்தில் கூறப்பட்ட அடிப்படையான கருத்தாகும். அந்த வகையில் நாளை (மே 4)...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -