வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு கோரி போராட்டம் – பா.ம.க.,வினர் பஸ், ரயில்கள் மீது கல்வீச்சு!!!

0

சென்னையில் வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில், 20% இடஒதுக்கீடு போராட்டத்தில் பிற மாநிலங்களில் இருந்து, ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளவரும் பா.மா.க.,வினரை பெருங்களத்தூரில் சரக உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த பா.மா.க வினர் பஸ், ரயில்களிலில் கல் வீசி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.  இதனால் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை நேரில் சந்தித்து முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இடஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்:

சென்னையில் பா.மா.க வினர் வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 20% இடஒதுக்கீடுகோரி, ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தனர். இதில் கலந்து கொள்ள பிற மாநிலங்களில் இருந்து, சென்னை வரும் பா.மா.க வினரை சேலையூர் சரக உதவி ஆணையாளர் தலைமையிலான போலீசாரால் தடுத்து நிறுத்தபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பா.மா.க வினர் அந்த வழியாக சென்ற பஸ்ஸின் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

கடுமையான போக்குவரத்து நெரிசல்:

traffic

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த பா.மா.க வினர் எவ்வித முன்னறிவிவும் இன்றி, பெருங்களத்தூரிலில் உள்ள ஜி.எஸ்.டி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், ஐ.டி ஊழியர்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

போலீசாரால் கைது:

அதோடு மட்டும் இல்லாமல் அந்த வழியாக சென்ற பேருந்தின் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் ரயில்களை மறியல் செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளான நிலையில் பேருந்தின் மீது கல்வீச்சு, ரயில் மறியல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 100கும் மேற்பட்ட பா.மா.க வினரை போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here