திடீரென உடல் எடை கூடி குண்டான பிக் பாஸ் அபிராமி – ரசிகர்கள் ஷாக்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல கலைஞர்களை அறிமுகப்படுத்தி வருகிறது என்றே சொல்லலாம். அதில் கலந்து கொண்ட ஒருவர் தான் அமிராமி ஐயர். ஆரம்பத்தில் ஸ்லிம்மாக இருந்த அபிராமி இப்பொழுது உடல் எடை அதிகரித்து குண்டாகி உள்ளார்.  அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

பிக் பாஸ் அமிராமி

தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்தவர் அபிராமி. அந்த படம் வெளிவரும் முன்னரே அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மாடலிங் துறையில் இருந்த அபிராமிக்கு அரிய வாய்ப்பாக பிக் பாஸ் அமைந்தது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆரம்பத்தில் அந்த அளவிற்கு அபிராமி மீது எந்த அபிப்பிராயமும் இல்லை என்றே சொல்லலாம். அடுத்தடுத்து அவருக்கும் மீரா மிதுனுக்கும் பல சண்டைகள் ஏற்பட்டது. மேலும் இவர் கவினை ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் இருந்தே மிகவும் பிடிக்கும் என்றும், அவர் மீது ஒரு கிரஸ் இருப்பதாகவும் கூறி வந்தார்.

இதனை கவினிடமும் நேரடியாகவே கூறினார் அபிராமி. ஆனால் கவின் இதனை கண்டுகொள்ளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் ஆரம்ப காலத்தில் அனைவரும் பயப்படும் அளவிற்கு இவரின் செய்கைகள் இருந்தது. இவருக்கும் மதுவுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டை பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகே இவர் முகின் உடன் பழக ஆரம்பித்தார். ஆரம்பத்தில் நட்பு ரீதியாக இருந்த உறவு அபிராமிக்கு காதலாக மாறியது. ஆனால் முகின் வெளியில் தன்னை நம்பி ஒரு பெண் இருப்பதாக அடிக்கடி கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் அபிராமி முகினை ஒருதலை பட்சமாக காதலித்து தான் வந்தார்.

mugen and abirami
mugen and abirami

மேலும் முகின் மற்றும் அபிராமி இடையே பல சண்டைகள் வெடித்தது. இந்நிலையில் தான் அவர் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படம் வெளியானது. அபிராமியா இது என்று அனைவரும் வியக்கும் படியாக அவரது நடிப்பு திறமை இருந்தது என்றே சொலலலாம்.

அவர் மீது ஒரு மரியாதை வந்தாலும் நாளடைவில் அதை கெடுத்து தான் கொண்டார். பிக் பாஸ் வீட்டில் மிகவும் ஒல்லியாக இருந்த அபிராமி தற்போது தாறுமாறாக உடல் எடையை ஏற்றியுள்ளார். பலரும் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here