அரியர் தேர்ச்சிக்கு எதிரான வழக்கு விசாரணை – யூடியூப் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதால் அதிர்ச்சி!!

0

கல்லூரி தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கலாம் என்று தமிழக அரசின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

கொரோனா பரவல் அச்சம்:

கொரோனா பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சியினை தமிழக அரசு வழங்கியது. அதே போல் கூடுதலாக பட்டய படிப்புகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க அரசு உத்தரவிட்டது. இது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த உத்தரவினை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த வழக்கினை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா கொண்ட அமர்வு விசாரித்து வருகின்றது. இந்த வழக்கின் போது மத்திய அரசு, மாநில அரசு, பல்கலைகழக மானிய குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆகியவை பதில் மனு அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் பதில் மனுவில் தமிழக அரசு அரியர் தேர்வுகளை ரத்து செய்ய அளிக்கப்பட்டுள்ள உத்தரவு பல்கலைக்கழகத்தின் விதிகளுக்கு முரணானது என்று பதில் மனு அளித்திருந்தது. இதற்கு தமிழக அரசு சார்பில் கூறப்பட்டதாவது கொரோனா நோய் பரவல் காரணமாக மாணவ சமுதாயமே பாதிப்பினை சந்தித்துள்ளது.

ஓயாமல் அழுகும் மீனாவின் குழந்தை – தவிப்பில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம்!!

அவர்களது நலன் கருதி தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று மனு அளித்திருந்தது. இந்த வழக்கு ஆன்லைன் வாயிலாக விசாரணைக்கு வந்த போது மாணவர்கள் மற்றும் சிலர் அமைதியை கடைபிடிக்காததால் வழக்கு தள்ளி வைக்கப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த முறையும் வழக்கு ஆன்லைன் வாயிலாக தான் விசாரிக்கப்பட்டது. வழக்கு விசாரணை யூடியூப் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதால் தற்போது அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த செயலை கண்டிக்க வேண்டும் என்றும் இதனை நீதிபதிகளுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here