தமிழகத்தில் பள்ளிகளை விரைந்து திறக்க வேண்டும் – தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

0

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி வரும் நிலையில் மக்களின் நலன் கருதி அரசு பல்வேறு ஊரடங்கு தளர்வுகளையும் அறிவித்த வண்ணம் உள்ளது. மேலும் பள்ளிகள் குறித்த அறிவிப்புகள் ஏதும் வெளிவராத நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி பெற்றோர்களிடையும், மாணவர்களிடையும் எழுந்துள்ளது. இது குறித்து முக்கிய வட்டாரங்கள் தரும் தகவல்களை பின்வரும் செய்திக்குறிப்பில் காணலாம்.

தனியார் பள்ளிகள் சங்கம் அரசுக்கு அழுத்தம்

பள்ளிகள் திறப்பதற்கு பல்வேறு அறிவிப்புகள் வந்தபோதெல்லாம் அதற்கு பல்வேறு தரப்பினர்களிடம் இருந்து எதிர்ப்புகளும் வந்த வண்ணமே உள்ளன. கடந்த நவம்பர் 16ம் தேதி பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்ட போதிலும், இதற்கு ஏதிர்கட்சியினர், சமூகஆர்வலர்கள், பெற்றோர்கள் என பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். பின்பு பள்ளிகள் திறக்கும் முடிவானது கைவிடப்பட்டது. இதற்கிடையில், தனியார் பள்ளிகள் சங்கம் தங்கள் சார்பில் அரசுக்கு பள்ளிகள் திறப்பதற்கான கோரிக்கையை வைத்துள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அந்த கோரிக்கையில், தமிழகத்தில் பள்ளிகள் 10 மாதங்களுக்கு மேலாக திறக்கப்படாத வண்ணம் உள்ளன. இதனால் மாணவர்களுக்கு பாடங்களை சரிவர இயற்ற இயலாத நிலை உள்ளது. மேலும் பல மாணவர்களுக்கு கற்கும் எண்ணமே இல்லாமல் போய்விட்டது. உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளில் பலர் பள்ளிக்கட்டணம் செலுத்தவில்லை. மெட்ரிக் பள்ளிகளில் 80% மாணவர்களே கட்டணம் செலுத்தி உள்ளனர். இதனால் உரிய சம்பளம் வழங்க முடியாததால் ஆசிரியர்கள் கூலி வேலைக்கு செல்லும் அவலமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

school reopening in tn 2020 latest announcement
school reopening in tn 2020 latest announcement

கிராமங்களில் உள்ள மாணவர்களில், பலருக்கு மொபைல்போன், இணையவசதி சரிவர கிடைக்க பெறாததால் ஆன்லைன் கல்வியை கற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தனியார் பள்ளிகளில் 50% மாணவர்கள் புத்தகம் வாங்கவில்லை என்றும் அவர்களுக்கு அரசின் சார்பில் புத்தகம் வழங்கபட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். பல நாடுகளில் பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு சிறப்பான முறையில் கற்பிக்கபடுவதாகவும் தெரிவித்தனர். எனவே தமிழகத்தில், முகக்கவம், தனிநபர் இடைவெளி ஆகிய நடவடிக்கைளை பின்பற்றி பள்ளிகளை திறக்க உத்தரவிடுமாறு மெட்ரிக் மற்றும் சி.பி.ஸ்.ஏ பள்ளிகள் சங்க மணிலா பொது செயலாளர் நந்தகுமார் தெரிவித்தார்.

பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய வட்டாரங்கள்:

அரசின் கொரோனா தொற்று நடவடிக்கைளை பின்பற்றி பள்ளிகளை திறக்கலாம் என்று ஒரு தரப்பிரனரும், மழைக்காலங்களில் தொற்றுகள் பரவ வாய்ப்புக்குள் அதிகம் உள்ளதால் தைப்பொங்கலுக்கு பின் பள்ளிகளை திறக்கலாம் என்று மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

இந்த மாத இறுதியில் அடுத்த மாதத்திற்கான தளர்வுகள் அரசு வெளியிடுகையில், தைப்பொங்கலுக்கு பின் பள்ளிகளை திறக்கலாம் என்ற அறிவிப்பு வெளிவரும் என்று சில முக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here