PUBG தடை எதிரொலி – இந்தியாவில் தயாரிக்கப்பட்ட FAU-G கேமை வெளியிட்ட அக்ஷய் குமார்!!

0

இந்தியாவில் PUBG உட்பட 118 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்நிலையில் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட FAU-G எனும் புதிய ஆன்லைன் விளையாட்டை பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வெளியிட்டு உள்ளார்.

FAU-G அறிமுகம்:

இந்திய, சீன ராணுவத்திற்கு இடையே லடாக் எல்லையில் நடைபெற்ற மோதலை தொடர்ந்து இந்தியாவில் சீன தயாரிப்புகளுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. சீன எலக்ட்ரானிக் பொருட்கள், அரசு ஒப்பந்தங்களுக்கு மத்திய அரசு பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் சீன வர்த்தகத்தில் பெரிய அடி விழுந்த நிலையில், பிரதமர் மோடி அவர்கள் ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தை ஊக்குவிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு படியாக இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள், இந்திய நிறுவனங்கள் முதலீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

PUBG
PUBG

சீன பொருளாதாரத்திற்கு அடுத்த அடியாக அந்நாட்டைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இதில் டிக்டாக், ஷேர்சாட், பப்ஜி உள்ளிட்ட முக்கிய செயலிகளும் அடக்கம். இதற்கு சீன வர்த்தக அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் இந்திய அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. மாறாக இந்திய தயாரிப்புகளுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.

ரம்மி, போக்கர் போன்ற ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை – மாநில அரசு அதிரடி!!

அந்த வகையில் இந்திய இளைஞர்களின் அதிக மனம் கவர்ந்த பப்ஜி விளையாட்டிற்கு பதிலாக முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட FAU-G எனும் கேம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை நடிகர் அக்ஷய் குமார் ட்விட்டரில் வெளியிட்டு உள்ளார். அவரது பதிவில், பிரதமர் மோடியின் ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் இது தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில் பொழுதுபோக்கிற்கும் மேலாக இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை அறிந்து கொள்ளலாம். மேலும் இதன் 20% வருவாய் ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்திற்கு வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here