அழகிற்கும் உணவிற்கும் தொடர்பு உண்டா?? – வாங்க பார்க்கலாம்!!

0
Natural-fruit-facial
Natural-fruit-facial

நாம் முகத்திற்கு எவ்வளவு தான் மேக்கப் செய்தலும் சில உணவு பழக்கங்கள் சரும பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகிறது. நாம் சாப்பிடும் உணவிற்கும் நம் சரும கோளாறுகளுக்கும் அதிக சம்மந்தம் உள்ளன.

சரும பிரச்சனைகள்

பருவ வயதில் நமது முகத்தில் அதிகமாக பருக்கள் வரும் இதற்கு காரணம் நமது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களே. முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தூசு, அழுக்குகள் மட்டும் காரணங்கள் கிடையாது. சத்துக்கள் குறைபாடுகளும் காரணம். இதற்கு நாம் சில உணவுகளை மேற்கொள்வது மூலம் சரி செய்யலாம். மேலும் சரியான நேரத்திற்கு உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

dry skin
dry skin

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழி போல நாம் சாப்பிடும் உணவுகளின் சத்துக்கள் பொறுத்தே நம் முகத்திலும் தெரியும். நமது உடலில் நீர் சத்துக்களை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. இதனால் பழங்கள் மற்றும் நீர் சத்துக்கள் அதிகம் உள்ள காய்களை சாப்பிட்டு வரலாம்.

fruits and vegitables
fruits and vegitables

நம் முகத்தில் தேவையில்லாத முடி வளருவதற்கு காரணம் ஆன்ட்ரோஜன் அதிகமாக சுரப்பதால் தான். இதனால் மருத்துவர்கள் ஆலோசனையுடன் முடியை அகற்றலாம். நம் முகத்தில் பருக்கள் வருவதற்கு முக்கிய காரணம் நமது உணவு பழக்கம். ரோட்டு கடைகளில் சாப்பிடுவது, துரித உணவுகளை உண்பது போன்றவை முகத்தில் பருக்களை ஏற்படுத்தும். மேலும் பால் மற்றும் அதன் சம்மந்தப்பட்ட உணவுகளை சாப்பிடும்போது முகத்தில் எண்ணெய் சுரபி அதிகமாக சுரக்கும். இதனால் முகப்பரு ஏற்படுகிறது.

dry lips
dry lips

மேலும் நம் கண்களை சுற்றி கருவளையம் வருவதற்கு காரணம் தூக்கமின்மை என நினைத்துக்கொண்டுள்ளோம். ஆனால் அது மட்டும் காரணம் அல்ல. நமது உடலில் அமிலத்தன்மை அதிகமாக இருந்தால் கருவளையம் ஏற்படும். இதற்கு காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

Acne-skin
Acne-skin

சிலருக்கு உதடு கருமை மற்றும் வறட்சியுடன் காணப்படும். இதற்கு வைட்டமின் சி குறைபாடு தான் காரணம். இதற்கு வைட்டமின் சி அதிகமுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம். உடலில் நீர் சத்து பற்றாக்குறையாலும் உதடு வறட்சி ஏற்படலாம். இதற்கு நாம் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here