Friday, April 26, 2024

‘மார்ச் முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி வெளியாகலாம்’ – பிரதமர் மோடி மறைமுக தகவல்!!

Must Read

தமிழகம், புதுச்சேரியுடன் மேலும் மூன்று மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என பிரதமர் மோடி மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என ஏற்கனேவே அறிவிக்கப்பட்டிருந்தது. சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி நேற்று சுற்று பயணம் மேற்கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் கலந்துரையாடிய பிரதமர் மோடி, ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதிக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் என மறைமுகமாக தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, மார்ச் 4ம் தேதிதான் தேர்தலுக்கான நாள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திரிஷ்யம் 2 படம் பற்றி அஸ்வின் கருத்து – நன்றி தெரிவித்த மோகன்லால்!!

தொடர்ந்து அவர் பேசியபோது, ‘இந்த ஆண்டுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். தேர்தலுக்கு முன்னதாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறை அசாம், மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு பயணம் செய்ய விரும்புகிறேன். மார்ச் 7ம் தேதி தேர்தல் அறிவிப்புகள் வெளியாகலாம். அதுவரை எனக்கு நிறைய நேரமுள்ளது’ என பேசினார். பிரதமரின் இந்த பேச்சால் தேர்தலுக்கான அறிவிப்புகள் மார்ச் முதல் வாரத்தில் வெளிவரலாம் என கருத்துக்கள் நிலவி வருகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??

தினந்தோறும் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஏப்ரல் 26) சென்னை கோயம்பேடு சந்தைக்கு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -