ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் விலை – மத்திய அமைச்சர் விளக்கம்!!

0

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதை குறித்து மத்திய அமைச்சர் விளக்கியுள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல்:

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கொரோனா காலத்திற்கு பின்பு பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சதை அடைந்து வருகிறது. மேலும் இந்தியாவில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டி வரலாற்று சாதனையை படைத்தது. இந்த விலை உயர்வினால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். மேலும் மத்திய அரசிடம் எதிர்க்கட்சிகள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்குமாறு கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு தான் காரணம் என்று அதிரடியாக கூறியது. தற்போது இந்த விலை உயர்வு குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அவர் கூடியதாவது, கொரோனா பாதிப்புக்கு பின்பு பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகள் பெட்ரோல் உற்பத்தியை குறைத்து வருகின்றனர்.

‘பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம்’ – நிதித்துறை செயலாளர் குற்றச்சாட்டு!!

பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை காரணாமாக தான் தற்போது விலை அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது பெட்ரோலிய பொருட்களின் விலை சற்று குறைந்து வருகிறது. மேலும் கடத்த சில தினங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் இதுகுறித்து இனி ஜிஎஸ்டி கவுன்சில் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here