டூல்கிட் வழக்கு – திஷா ரவிக்கு ஜாமின் வழங்கிய டெல்லி நீதிமன்றம்!!

0

விவசாய போராட்டத்தை பயன்படுத்தி சில சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுப்பட்டதாக கூறி திஷா ரவி கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

டூல்கிட் வழக்கு:

டெல்லியில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். இதனால் பல வன்முறை கலவரங்கள் வெடித்தது. மேலும் தற்போது வரை அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் இந்த போராட்டத்தை வைத்து பலரும் இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் டூல்கிட் என்ற பெயரில் செயல் திட்ட ஆவணத்தை உருவாக்கி, அதை சர்வதேச அளவில் சில பிரபலங்களுடன் பகிர்ந்துள்ளார் சுற்றுசூழல் ஆர்வலர் திசா ரவி.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக இவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். மேலும் இவர் மீது தேச துரோகம் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்பு இவர் தனக்கு ஜாமீன் வழங்க கூறி விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 20ம் தேதி அன்று விசாரணைக்கு வந்தது.

புதிய விதிமுறைகளை ஏற்க கட்டாயப்படுத்தும் வாட்ஸ் ஆப் – அதிர்ச்சியில் பயனாளர்கள்!!

அப்போது இவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று கூறி டெல்லி காவல் துறை தொடர்ந்து கடுமையாக வாதிட்டது. இந்நிலையில் தற்போது டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்ட திஷா ரவிக்கு டெல்லி கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு அனைவரையும் சற்று அதிரவைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here