ஊரடங்கால் ஏற்படும் உடல் பருமன் – எச்சரிக்கும் மருத்துவர்கள்.!

0

கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம் உண்டு என மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர். மேலும், காய்கறி மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடவேண்டும் என்றும் அவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

ஊரடங்கு

India would have 8.2 lakh Covid19 cases without lockdown: Health ...

நாடெங்கிலும் ஊரடங்கு பிறப்பித்த நிலையில் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் பெரும்பாலான அலுவலகங்களில் பணியாளர்கள் வீட்டிலேயே வேலை பார்க்கின்றனர். மேலும் இதனால் குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் டிவி பார்ப்பதும் அறைக்குளேயே விளையாடுவதும் என இருக்கின்றனர். வீட்டிலேயே இருந்து வருவதால் உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இதயவியல் மருத்துவர்கள்

இது பற்றி இதயவியல் மருத்துவர் கூறுகையில், “உடல் உழைப்பு குறையும்போது பருமன் நிச்சயம் அதிகரிக்கும். உடல் பருமன் என்றைக்கும் நல்லது அல்ல. ஆரோக்கியமான உடல்தான் நம்மை நீண்ட காலம் வாழவைக்கும். தற்போது ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கிறார்கள். வழக்கமான நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு முடிந்துவிட்டால் எல்லாமே சரியாகிவிடும் என்று பெரும்பாலானோர் நினைக்கிறார்கள், இது தவறு.

கொரோனாவிற்கு புதிய வெளிச்சம் ‘ரெம்டெசிவைர்’ மருந்து – நிவாரணம் கிடைக்குமா?

7 Best Part-Time, Work From Home Jobs | Careers | US News

20 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை உடல் உழைப்பு இல்லாதபோது 5 கிலோ முதல் 10 கிலோ வரை உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லதல்ல. எனவே தினமும் வீட்டிலேயே தியானம், யோகாவில் ஈடுபடுங்கள்.

Know your Cardiology Doctor: Different types of heart doctors in India

முடிந்தவரை வீட்டு வளாகத்திலேயே நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யுங்கள். சும்மா உட்காராமால், பிள்ளைகளுடன் விளையாடி பரபரப்பாக இருங்கள். அடிக்கடி தூங்காதீர்கள். இதையெல்லாம் முறையாக கடைபிடித்தாலே உடல் பருமன் பிரச்சினையில் இருந்து எளிதில் தப்பித்து கொள்ளலாம்” இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

உடற்பயிற்சி ஊட்டச்சத்து நிபுணர்கள்

உடற்பயிற்சி ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறியதாவது, ” உடல் உழைப்பு அதிகம் தேவைப்படாத இந்த ஊரடங்கு காலத்தில் முடிந்தவரை கடின உணவுகளை குறைத்து கொள்ளுங்கள். அதிகளவு காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணலாம். கீரைகளை அதிகம் உணவில் எடுத்து கொள்ளவேண்டும். குளிர்பானங்களுக்கு பதிலாக எலுமிச்சை ஜூஸ், மோர், லஸ்சி, இளநீர் போன்ற பானங்களை அருந்துவது உடலுக்கு நல்லது. நல்ல ஓய்வு என்பது இரவு தூக்கம் தான். எனவே இரவு தூக்கத்தில் சமரசம் செய்யாதீர்கள்.

மெத்திலேஷன் உதவிக்கான உடற்பயிற்சி ...

இந்த ஊரடங்கு காலத்தில் குறித்த நேரத்தில் சாப்பிடுவது, குறித்த நேரத்தில் உறங்க செல்வதை வழக்கப்படுத்தி கொள்ளுங்கள். இறைச்சி உணவுகள் சாப்பிட்டாலும் சுடுதண்ணீர் குடியுங்கள். வீட்டில் சிறிய சிறிய வேலைகளை செய்து முடிந்தவரை உங்கள் கலோரிகளை எரிக்க முயற்சி செய்யுங்கள். உடல் பருமன் பிரச்சினையில் சிக்கிடாமல் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ கற்றுக்கொள்ளுங்கள்.” இவ்வாறெல்லாம் அவர்கள் கூறியுள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here