புதுவை சட்டமன்ற தேர்தல் – காங்கிரஸ்-திமுக இடையே 2ம் கட்ட பேச்சுவார்த்தை!!

0

தமிழகம், புதுவை உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக திமுகவுடன் கூட்டணி சேர்ந்து புதுவையில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகம் மற்றும் புதுவையில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஏற்கனவே புதுவையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் அரசியல் களம் தொடர்ந்து பரபரப்பாகவே காணப்பட்டு வருகிறது. தற்போது நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கண்டிப்பான முறையில் வெற்றி பெற வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த தேர்தலை போல் இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான பணிகளில் தற்போது ஸ்டாலின் மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும் நேற்று திருச்சியில் நடத்த பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல நல்ல திட்டங்களை அறிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் – ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே மோதல்??

இந்நிலையில் புதுவையில் காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பேச்சு வார்த்தையில் சுமுகமான முடிவு ஏற்பட்டது போல் தெரியவில்லை. இந்நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி அடுத்த கட்ட பேச்சு வார்த்தையை நடத்தவுள்ளது. புதுவையில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீடு குறித்து நாளை அல்லது நாளை மறுநாள் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here