விருது வழங்கும் விழாவில் புகழை கட்டிப்பிடித்து அழுத அஸ்வின் – வைரலாகும் புகைப்படம்!!

0

விருது வழங்கும் விழா ஒன்றில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் புகழ் அஷ்வின் விருது பெற்றதும் கண் கலங்கினார். இதற்கான காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில் தற்போது அஷ்வின் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

கண் கலங்கிய அஷ்வின்

திரைப்பிரபலங்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்துவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தனியார் சேனல் ஒன்று திரையுலக பிரபலங்களுக்கான விருது வழங்கும் விழாவை நடத்தியது. அதில் பல திரையுலக பிரபலங்களும், சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த வகையில் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் பிரபலங்களும் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சமீப காலமாக மக்கள் மத்தியில் பிரபலமாகிக்கொண்டிருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. இதில் குக்காக கலந்து கொண்டு வரும் நடிகர் அஷ்வின் அதிகமான ரசிகர்களை சம்பாத்தித்துள்ளார்.

விளம்பர மாடலான அஷ்வின் சில குறும்படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவற்றில் கிடைக்காத பேரும், புகழும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அஷ்வினுக்கு கிடைத்துள்ளது என்று கூறுவது மிகையாகாது. தற்போது நடந்து முடிந்துள்ள தனியார் சேனலின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அஷ்வின்.

வலை போன்ற உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த சமந்தா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

அந்நிகழ்ச்சியில் விருது வாங்கிய அஷ்வின் மேடையில் வைத்து கண் கலங்கியுள்ளார். அந்த புகைப்படங்கள் நேற்று சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து அஷ்வின் அந்நிகழ்ச்சியில் கண் கலங்கியதற்கான காரணத்தை தெரிவிக்கும் படி சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

விருது வழங்கும் விழா மேடையில் அஷ்வின் அழுததற்கான காரணத்தை தற்போது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். ‘இந்த இடத்துக்கு வருவதற்கு ஏழு வருடங்கள் ஆகி விட்டது. எனக்கு இந்த விருது கிடைத்தது மறக்க முடியாத ஒன்று’ என இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அஷ்வினின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here