தமிழக சட்டமன்ற தேர்தல் – ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே மோதல்??

0

அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்பதை முடிவு செய்வதில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக கட்சியுடன் பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் கூட்டணியில் இணைத்துள்ளது. மேலும் கூட்டணி கட்சிகளான பாஜகவிற்கு 20 தொகுதி மற்றும் கன்னியாகுமரி இடைத்தேர்தல் தொகுதி, பாமகவினருக்கு 23 தொகுதிகளையும் ஒதுக்கியுள்ளது. மேலும் தேமுதிக மற்றும் தாமாக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து இழுபறி நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக சார்பில் போட்டியிடப்போகும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அடுத்த கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. ஏனெனில் தற்போது அதிமுக கட்சியில் ஓபிஎஸ் தொண்டர்கள் மற்றும் இபிஎஸ் தொண்டர்கள் என இரு அணிகளாக பிரிந்துள்ளனர். இந்த இரு தரப்பு தொண்டர்களும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்சை நாடி தங்களை வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்ஸிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சி 50-50 பார்முலாவை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் – எம்ஜிஆர் பாடலை மனப்பாடம் செய்யும் பிரதமர்!!

இந்த 50-50 பார்முலா காரணமாக முன்னணி தலைவர்களின் பலரது பெயர்கள் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் இபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் சேர்ந்து கையெழுத்திட்டால் தான் இரட்டை இல்லை சின்னம் கொடுக்கப்படும். ஆனால் தற்போது இவர்களுக்கு இடையில் பிரச்சனைகள் நிலவி வருவதால் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளிவருவதில் தாமதம் ஏற்படுவது போல் தெரிகிறது. இதன் எதிரொலியாக ஓபிஎஸ் கலந்துகொண்ட மகளிர் தின விழாவில் இபிஎஸ் கலந்துகொள்ளவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here