பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் திரைப்படம்?? மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

0

கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த மாஸ்டர் திரைப்படம் தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர்:

தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கூட்டணியில் வெளிவந்த படம் தான் மாஸ்டர் திரைப்படம். இந்த திரைப்படம் ஊரடங்கு காலத்திற்கு பின்பு மக்கள் அனைவரையும் திரையரங்கிற்கு வரவைத்த திரைப்படமாக திகழ்கிறது. மேலும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வசூலிலும் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. சாதாரணமாகவே தளபதி படம் என்றால் வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.அதேபோல் இந்த திரைப்படம் தற்போது வரை சுமார் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்த படத்தை இயக்கிய லோகேஷிற்கும் பல தரப்பினர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் மிக முக்கிய பங்கு வகித்தது அனிருத்தின் இசை தான். அவர் இசையமைத்த ‘வாத்தி கம்மிங்’ பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் குத்தாட்டம் போடவைத்துள்ளது. மேலும் இந்த படத்தில் இவர் இசையமைத்த அனைத்து பாடல்களும் மிக பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்படம் 50வது நாளை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சர்வதேச மகளிர் தினம் – அரசியல் தலைவர்கள் வாழ்த்து!!

மேலும் விரைவில் மாஸ்டர் திரைப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று ஏற்கனவே அறிவித்தனர். தற்போது அதற்கு முன்பே மாஸ்டர் திரைப்படம் வேறு ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி மாஸ்டர் திரைப்படம் மலையாளத்தில் முன்னணி தொலைக்காட்சியான சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த தொலைக்காட்சியில் மாஸ்டர் திரைப்படத்தின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here