சர்வதேச மகளிர் தினம் – அரசியல் தலைவர்கள் வாழ்த்து!!

0

இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மகளிர் தினம்:

பெண்களை போற்றும் வகையில் இன்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் தாய், தமக்கை, தாரம் என பல வகையில் சிறந்து விளங்கி வருகின்றனர். தற்போதைய காலங்களில் அனைத்து துறைகளிலும் பெண்கள் தான் முன்னோடியாக இருந்து வருகிறார்கள். மேலும் பல சாதனைகளையும் பெண்கள் படைத்தது வருகின்றனர். முந்தைய காலங்களில் பாரதிதாசன், பாரதியார் போன்றவர்கள் பெண்களின் அடிமைத்தனத்தை எதிர்த்து பெரிதும் குரல் கொடுத்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் ஆண்களுக்கு நிகரான உரிமைகள், வேலைக்கேற்ற ஊதியம், பெண்களுக்கு அடிப்படை உரிமம் மற்றும் பெண்களுக்கு வாக்குரிமை ஆகியவற்றை முன்னிறுத்தி பாரிசில் போராட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வு உலகம் முழுவதும் பரவியது. இதனை அடுத்து தான் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

‘குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்கப்படும்’ – திருச்சி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் உறுதி!!

தற்போது இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாட்டின் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here