‘குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்கப்படும்’ – திருச்சி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் உறுதி!!

0

திருச்சியில் நேற்று தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

திமுக:

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் திமுக கட்சி சார்பாக திருச்சியில் தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்தினர். இதில் திமுக தலைவர் ஸ்டாலினும் கலந்துகொண்டார். இதில் பேசிய அவர் மக்களுக்கான பல நல்ல திட்டங்களை அறிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்தால் பல திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி அவர் கூறியதாவது, தமிழகத்தில் 35 லட்ச கோடியை கடந்து இரட்டை இழக்க பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தப்படும். மேலும் தனி நபர் வருமானத்தை ஆண்டுக்கு ரூ.4 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தப்படும். அதுமட்டுமல்லாமல் ஆண்டுக்கு 10 லட்ச வேலை வாய்ப்புகளை உருவாக்கி வேலை வாய்ப்பின்மை தன்மையை குறைக்கப்படும் என்றும் கூறினார். மேலும் தற்போது தமிழகத்தில் பயிரிடப்படும் பரப்புகளை 60 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் செய்யப்படும் இரு போக சாகுபடியை 25 லட்ச ஏக்கரில் இருந்து 50 லட்ச ஏக்கராக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

மேலும் கல்விக்காக செலவிடப்படும் செலவினை மூன்று மடங்கு உயர்த்தப்படும் என்றும் மாணவர்களின் இடை நிற்றல் விகிதத்தை 16 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கு கீழாக குறைக்கப்படும் என்றும் உறுதி கூறினார். தொடர்ந்து பேசிய அவர் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார். பட்டியல் இனத்தவர் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கல்விதொகையை இரு மடங்காக உயர்த்தப்படும் என்றும் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் வரும் காலங்களில் மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றும் இழிவு நிலை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்றும் அவர் உறுதி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here