14 வது ஐபிஎல் தொடர் – போட்டி அட்டவணை வெளியீடு!!

0

இந்தியாவில் நடைபெறவுள்ள 14வது ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த போட்டி வருகிற ஏப்ரல் மாதம் 9ம் முதல் மாதம் 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஐபிஎல்:

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த வகையில் தற்போது ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வருகிற ஏப்ரல் மாதம் 9ம் தேதி முதல் மே மதம் 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் கொரோனா பரவல் காரணமாக இந்த போட்டியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் ஓர் அதிர்ச்சியான தகவலும் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளனர்.

இதனால் ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் நிலைமை சரியான பின்பு ரசிகர்களின் அனுமதி குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி 6 நகரங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் அஹமதாபாத் ஆகிய மைதானத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளனர். மேலும் எந்த அணிகளுக்கும் தங்களது சொந்த நகரங்களில் ஆட்டங்கள் நடைபெறாது என்று அதிரடியாக அறிவித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி சென்னையில் 10 லீக் போட்டிகள் நடக்கும், ஆனால் சென்னை அணி சென்னை மைதானத்தில் விளையாடாது. இதே நிலைமை தான் மற்ற அணிகளுக்கும். இதனால் உள்ளூர் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு இதுதான் கடைசி தொடர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர் சென்னை மைதானத்தில் விளையாடாமல் இருப்பது அவரது சென்னை ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. மேலும் இந்த ஐபிஎல் போட்டிகள் இரவு நேர போட்டி இரவு 7.30 மணிக்கும் மற்றும் மதிய நேர போட்டி மதியம் 3.30 மணிக்கும் நடைபெறவுள்ளது.

மேலும் கொரோனா பரவல் காரணமாக இந்த தொடருக்காக ஒவ்வரு அணியின் வெறும் 3 முறை மட்டுமே பயணம் மேற்கொள்ளவுள்ளனர். மற்ற ஆண்டுகளில் ஒவ்வரு அணியும் 10 முதல் 12 முறை பயணிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் லீக் போட்டிகள் அனைத்தும் 4 மைதானத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி – இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி!!

இதனை தொடர்ந்து ஐபிஎல் தொடருக்கான முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி சென்னை மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது. தற்போது இந்த அறிவிப்பினால் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here