திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாடிய அல்லு அர்ஜுன் – வைரலாகும் கியூட் புகைப்படங்கள்!!

0

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் தனது திருமண நாளை தனது மனைவியுடன் காதல் சின்னமான தாஜ் மஹாலில் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

திரைத்துறையின் சூப்பர் ஸ்டார்

தெலுங்கு திரையுலகை பொறுத்தவரை மிகவும் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் தான். இவருக்கும் இவரது நடிப்பிற்கும் என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இப்படியாக இருக்க, இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு இதே நாளில் ஸ்னேகா ரெட்டி என்பவரை ஒரு திருமண விழாவின் போது சந்தித்து காதலில் விழுந்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த காதல் தம்பதியருக்கு அல்லு அயன் மற்றும் அல்லு அர்கா என்று இரு குழுந்தைகள் இருக்கின்றனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி – இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி!!

திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் இந்த தம்பதியினர் தீராத காதலுடன் இருந்து வருகின்றனர். அவ்வப்போது இருவரும் இணைத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவர். அந்த கியூட்டான புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த வகையில் இன்று தங்களது திருமண நாளை கொண்டாடும் இந்த தம்பதியினர் திருமண நாள் கொண்டாட்டத்திருக்காக காதலின் சின்னமான தாஜ் மஹாலிற்கு சென்று தாங்கள் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

அழகான வெள்ளை நிற உடையில் இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே காதலுடன் இருக்கும் அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் இன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here