புதிய வாகன கொள்கை – பழைய காரை கொடுத்து புதிய கார் வாங்குபவர்களுக்கு தள்ளுபடி!!

0

இந்தியாவில் புதிய வாகன கொள்கையை அமல்படுத்தும் வகையில் பழைய கார்களை கொடுத்து புதிய கார்களை வாங்க முன்வருபவர்களுக்கு வாகன நிறுவனம் தள்ளுபடி அளிக்கும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதிய வாகன கொள்கை:

இந்தியாவில் வாகன கட்டுபாட்டில் மத்திய அரசு பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இனி வரும் புதிய கார்கள் அனைத்திலும் முன்பக்கத்தில் இரு ஏர்பேக்குகள் அமைப்பதை கட்டாயமாகியுள்ளது. தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. இதனை மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் புதிய வாகன கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது மத்திய அமைச்சர் இது குறித்து அறிவித்ததாவது, 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படும் தனி நபர் வாகனங்களும் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படும் வர்த்தக ரீதியாக வாகனங்களையும் நீக்குவதற்கு தற்போது மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே பயனாளர்களுக்கு உதவி செய்யும் வகையில் பழைய வாகனங்களை கொடுத்து புது வாகனங்களை வாங்க முன்வருபவர்களுக்கு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கும் என்று அறிவித்தார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் மாசு கட்டுப்பாடு மற்றும் தகுதி சான்றிதழ் பெரும் நடைமுறை அதுவாகவே நடக்கும் வகையில் புதிய வாகன கொள்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் சான்றிதழ் வழங்கும் மையங்கள் அமைக்கும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. மேலும் புதிய வாகன கொள்கையில் தானியங்கி சோதனையில் தேர்ச்சி பெற தவறும் வாகனங்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here