தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – மாநகராட்சி ஆணையர் தகவல்!!

0

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அடுத்த வாரம் போடப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தல் பணிகளில் 35 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா கால தடுப்பூசி

கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா நோய் தொற்று மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றது. இதன் காரணமாக இந்தியாவில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து இந்தியாவில் இந்த தொற்றிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த தடுப்பூசியினை மக்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து செலுத்தி வருகின்றது. இதனால் மக்கள் ஒரு அளவிற்கு எதார்த்த வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

ஏற்றத்துடன் தொடங்கிய சென்செக்ஸ் புள்ளிகள் – இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!!

தமிழகத்திலும் தொடர்ந்து மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. முதல் கட்டமாக, முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள், ராணுவத்தினர் மற்றும் செவிலியர்கள் தடுப்பூசியினை செலுத்தி கொண்டார். இது மட்டும் அல்லாமல் திரை பிரபலங்களும் தடுப்பூசிகளை செலுத்தி கொள்கின்றனர். இன்னும் சில நாட்களில் வர இருக்கும் தேர்தலுக்கான பணிகளில் அரசாங்க ஊழியர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் நிருபர்களிடம் இது குறித்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, “தமிழகத்தில் நடைபெற இருக்கும் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளில் ஈடுபட இருக்கும் 35 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி போடப்படும். தற்போது வரை தமிழகத்தில் 1.60 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here