ஏற்றத்துடன் தொடங்கிய சென்செக்ஸ் புள்ளிகள் – இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!!

0

இந்த வாரத்தின் முதல் நாளான இன்று சென்செக்ஸ் புள்ளிகள் இன்றைய நிலவரப்படி ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்செக்ஸ்:

கடந்த வாரம் முழுவதும் இந்திய சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் சரிவுடன் காணப்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் பெரிதும் கவலை அடைந்து வந்தனர். தற்போது வாரத்தின் முதல் நாளான இன்று சென்செக்ஸ் புள்ளிகள் அதிகரித்துள்ளதால் முதலீட்டாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். அதன்படி இன்று ப்ரீ ஓப்பனிங் சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் 405.27 புள்ளிகள் உயர்ந்து 50,810 புள்ளிகளாக காணப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் நிஃப்டி 129.40 புள்ளிகள் அதிகரித்து 15,067 புள்ளிகளாக காணப்பட்டது. மேலும் தொடக்கத்திலும் சென்செக்ஸ் புள்ளிகள் 282.54 புள்ளிகள் அதிகரித்து 50,687.86 புள்ளிகளாகவும், நிஃப்டி 77.90 புள்ளிகள் அதிகரித்து 15,016 புள்ளிகளாகவும் காணப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் பச்சை நிறங்களில் காணப்பட்டது. சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஓஎன்ஜிசி, லார்சன், ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் தொடர்ந்து உயர்ந்து காணப்படுகிறது.

14 வது ஐபிஎல் தொடர் – போட்டி அட்டவணை வெளியீடு!!

ஆனால் பஜாஜ் ஆட்டோ, அல்ட்ராடெக் சிமெண்ட், ஏசியன் பெய்ண்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிவாக காணப்படுகிறது. மேலும் அமெரிக்க டாலருக்கான இந்திய மதிப்பும் ரூ.73க்கு மேலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சென்செக்ஸ் புள்ளிகள் 553.67 புள்ளிகள் உயர்ந்து 50,958.99 புள்ளிகளாகவும், நிஃப்டி 158.25 புல்லலிகள் உயர்ந்து 15,096.35 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here