தமிழக சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் – தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!!

0

தமிழகத்தில் இன்னும் 3 நாட்களில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் இதற்காக வருகிற 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையர்கள் அறிவித்தனர். வேட்பு மனு தாக்களுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளதால் தற்போது தேர்தல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நடந்து வரும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி அவர் கூறியதாவது, தமிழகத்தில் 88 ஆயிரத்து 937 வாக்கு சாவடிகள் இடம்பெற்றுள்ளது. வேட்பு மனு தங்களுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. தமிழகத்தில் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த முறை பொதுமக்கள் வாக்காளர் அட்டைக்கு மாறாக ஆதார் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் போன்ற 11 முக்கிய ஆவணங்களை காண்பித்து ஓட்டு போடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் ஒட்டு எண்ணிக்கை 76 மையங்களில் நடைபெறும் என்று அறிவித்தார்.

தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – மாநகராட்சி ஆணையர் தகவல்!!

தேர்தல் குறித்த புகார்களை 1950 என்ற எண்ணிற்கு 24 மணி நேரமும் மக்கள் தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், கொரோனா காலத்தில் தேர்தல் நடப்பதால் அதற்கான முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் ஒட்டு போடுபவபர்களுக்கு கையுறை வழங்கப்படும் என்றும் மின்னணு முறையில் நடைபெறும் தேர்தல் என்பதால் கொரோனா பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here