அப்துல் கலாமின் சகோதரனின் உடல் நல்லடக்கம் – பொதுமக்கள் அஞ்சலி!!

0

நம் நாட்டின் மறைந்த முன்னாள் குடியரசு தலைவரான அப்துல் கலாமின் மூத்த சகோதரன் நேற்று இரவு காலமானார். இந்நிலையில் அவரது உடல் தற்போது நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம்:

சிறு வயதில் நாளிதழ் போடும் சிறுவனாக இருந்து நாளடைவில் தனது விடா முயற்சியால் நாட்டின் குடியரசு தலைவரானார் அப்துல் கலாம். மேலும் இவர் விண்ணியல் ஆராய்ச்சியில் பல்வேறு சாதனையை படைத்துள்ளார். இவரது சாதனையை இந்த உலகமே திரும்பி பார்த்தது. அந்த அளவிற்கு தனது திறனால் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் அப்துல் கலாம். இவர் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி உயிரிழந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது வரை அப்துல் கலாமை போன்ற ஓர் மனிதரை இந்த உலகம் பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இவரது குடும்பம் ராமேஸ்வரத்தில் வசித்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு இவரது மூத்த சகோதரன் காலமானார். அவர் பெயர் முஹம்மது முத்து மீரா மரைக்காயர். இவருக்கு வயது 104, வயது முதிர்வு காரணாமாக இவர் காலமாகியுள்ளார். பின்பு இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராமேஸ்வரம் முஸ்லீம் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

ரூ.510 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ஒயின் ஷாப் – வியப்பில் மாநில அரசு!!

அவருக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் வந்து தங்களது அஞ்சலியை தெரிவித்தனர். பின்பு இவரது வீட்டில் இருந்து இன்று பிற்பகல் அவரது உடலை ஊர்வலமாக எடுத்து சென்று முகைதீன் ஆண்டவர் தொழுகை பள்ளி வளாகத்தில் இஸ்லாமிய முறைப்படி அவரது உடலை நல்லடக்கம் செய்தனர். அங்கும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here